வேகமாக பரவும் ஓமிக்ரான் வகை கொரோனா ! 144 தடை உத்தரவு !
கொரோனா வைரஸின் புதிய பரிமாணமான ஓமிக்ரான் வகை கொரோனா மும்பை மாநகரில் அதிகம் பரவும் காரணத்தினால் இரண்டு நாட்களுக்கு 144 தடை உத்தரவு நகர் முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சனி, ஞாயிறுகளில் மக்கள் அதிகம் வெளியே நடமாட வாய்ப்புள்ள காரணத்தினால் இந்த 144 தடையை அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த ஓமிக்ரான் வகை கொரோனா வைரஸ் ஆனது, இதற்கு முன்பு வந்த கொரோனா மற்றும் டெல்டா வகை கொரோனாவை விட பல மடங்கு வீரியம் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற வகை கொரோனாவை விட மிக வேகமாக மக்களிடையே பரவும் எனவும் மருத்துவ வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
மக்கள் மத்தியில் ஓமிக்ரான் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு முன்னரே அதை பரவ விடாமல் தடுக்க அரசாங்கம் வழிமுறைகளை வகுத்து வருகிறது. மும்பையில் 144 தடை உத்தரவை மீறுபவர்களுக்கு ஐ,பி.சி செக்சன் 188-ன் கீழ் தண்டனைகள் அளிக்கப்படும் எனவும் மஹாராஷ்டிரா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த 24 மணிநேரத்தில் 695 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை அந்த மாநிலத்தில் அறுபத்தி ஆறு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிதாக பரவிவரும் ஓமிக்ரான் கொரோனா வைரஸால் மகாராஷ்டிராவில் இதுவரை 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே 10 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் ஏழு பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதை புனே நகரின் முனிசிபல் கார்ப்பரேஷன் உறுதிசெய்துள்ளது.
- அமேசான் நதி வறட்சி: உலகின் நுரையீரல் அழிந்துவிடுமா? பூமியின் எதிர்காலம் கேள்விக்குறி!
- சதுர வடிவ விண்கல்: ஹோபா எரிக்கல்லின் பின்னணியில் மறைந்திருக்கும் அறிவியல்!
- வாழ்க்கையின் கசப்பான உண்மைகள் – ஒரு சிங்கத்தின் கடைசி பாடம்
- தன்னம்பிக்கையே வெற்றியின் முதல் படி!
- பெருமிதத்துடன் பதிலளித்த ஆபிரகாம் லிங்கன்
ஓமிக்ரான் பரவியுள்ள 17 பேரும் வெளிநாட்டிலிருந்து பயணம் செய்து இந்தியாவுக்கு வந்துள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஓமிக்ரான் வகை கொரோனாவானது அதிக வீரியம் வாய்ந்ததாக இருந்தாலும், முறையான மருத்துவ சிகிச்சையின் மூலம் அதிலிருந்து குணமடையலாம் எனவும் மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
ஓமிக்ரானின் தாகம் பிப்ரவரி மாதம் இந்தியாவில் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது எனவும் வல்லுனர்கள் கணிக்கின்றனர். ஓமிக்ரான் வேகமாக பரவுவதற்கு முன்னர் நாட்டு மக்கள் அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் ஓமிக்ரானிலிருந்து சுலபமாக தப்பிக்கலாம் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அரசாங்கம் கூறும் விதிமுறைகளை பின்பற்றியும், முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும், தடுப்பூசி போட்டுக் கொண்டும் கொரோனா வைரஸை மக்கள் எதிர் கொள்ள வேண்டும். இந்த பெருந்தொற்று காலங்களில் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என deep talks தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.