அடடா படிக்கும் போதே நாவில் எச்சில் ஊரும்..! நெய்தல் நிலம் மக்களின் உணவுகள்..!
சங்க தமிழர்கள் இருக்கும் இடத்தை பொறுத்து நிலத்தை ஐந்து வகை திணைகளாக பிரித்து அவற்றுக்குத் தக்க வகையில் சீரும் சிறப்புமாக வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள்.
அந்த வகையில் இன்று நெய்தல் நிலத்தில் இருந்த மக்கள் என்னென்ன உணவினை உண்டு மகிழ்ந்திருக்கிறார்கள் என்பது பற்றிய சுவாரசியமான விஷயங்களை இந்த கட்டுரையில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
அதற்கு முன் நெய்தல் நிலம் என்பது பண்டைய தமிழகத்தில் கடலும், கடல் சார்ந்த இடங்களும் தான் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த திணையை “வருணன் மேய பெருமணல் உலகமும்” என்று தொல்காப்பியம் கூறியுள்ளது.
அப்படிப்பட்ட கடல் சார்ந்த நிலத்தில் வசித்து வந்த நம் பண்டைய தமிழர்கள் எப்படிப்பட்ட கடல் உணவுகளை புசித்தார்கள் என்பது உங்களுக்கு தெரிய வேண்டாமா.
ஓய்மானாட்டு பாலை நிலம் மக்களான வேட்டுவர், இனிய புளிங் கறி எனப்பட்ட சோற்றையும், ஆமாவின் சூட்டிறைச்சியும் உண்டதாக பாலை நிலத்தார் உணவு என்ற புத்தகத்தில் மா இராசமாணிக்கம் எழுதி இருக்கிறார்.
மேலும் தொண்டை நாட்டை சேர்ந்த பாலை நில மக்கள் புல் அரிசியை உரலில் போட்டு நன்கு குத்தி அந்த அரிசியை சமைத்து, உப்பு கண்டத்துடன் சேர்த்து சாப்பிட்டு இருக்கிறார்கள்.
விருந்தினர்கள் வந்துவிட்டால் அவர்களுக்கு தேக்கு இலையில் உணவை படைத்திருக்கிறார்கள். மேலும் மேட்டு நிலத்தில் விளைந்திருக்கும் ஈச்சங்கொட்டை, நெல் அரிசி சோற்றையும், உடும்பின் பொரியலையும் உண்டிருக்கிறார்கள்.
மேலும் இவர்கள் வர்ணனை தெய்வமாக நினைத்து வணங்கி இருக்கிறார்கள். மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல் முக்கிய தொழில் என்பதால் பெரும்பாலான மக்கள் மீனை முக்கிய உணவாக தங்கள் உணவில் தினமும் சேர்த்து வந்திருக்கிறார்கள்.
பொதுவாக நெய்தல் நில மண்ணில் சேர்ப்பன், நுளைச்சி, நுளையர், பரதவர், பரத்தியர் போன்ற இனங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வந்திருப்பதாக செய்திகள் கிடைத்திருக்கிறது.
இன்று எப்படி அசைவ உணவுகளை சில மக்கள் விரும்பி சாப்பிடுகிறார்களோ, அது போலவே நெய்தல் நில மக்கள் அதிக அளவு அசைவ உணவுகளையே தங்கள் உணவுகளில் சேர்த்து வந்திருக்கிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இதற்கு காரணம் இவர்கள் கடல் சார்ந்த பகுதியில் வசிப்பதால் இந்த உணவுகளை சமைப்பதற்கு உரிய அனைத்தும் அவர்களுக்கு எளிதாக கிடைத்துள்ளது.
உப்பு கருவாடு .. ஊற வச்ச சோறு.. என்ற பாடல் வரிகள் இந்த நிலத்தை சேர்ந்த மக்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். மேலும் உங்களது அபிப்பிராயம் என்ன என்பதை நீங்கள் எங்களுக்கு தெரிவிக்கலாம்.