தூங்கும் போது நடக்கும் மர்மமான விஷயங்கள் என்ன என்று தெரியுமா? – கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்..!
விஞ்ஞானத்தில் எவ்வளவு தான் வளர்ந்திருந்தாலும், நீங்கள் தூங்கும் போது உங்களுக்குள் என்ன நிகழ்கிறது என்ற டீ கோடிங்கை இன்னும் அறிவியல் அறிஞர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படி நான் தூங்கும் போது என்ன தான் உடலுக்குள் நிகழும் என்று நீங்கள் உங்கள் மனதுக்குள் பேசுவது நன்றாக கேட்கிறது.
நீங்கள் ஆழ்ந்து உறங்கும் போது உங்களுக்குள் ஒரு தூக்க முடக்கம் ஏற்படும்.இதனால் உங்களால் விழித்திருக்கவோ, அசையவோ முடியாத நிலையை உணர்வீர்கள். இதைத்தான் உறக்க முடக்கம் என்று கூறுகிறார்கள். இது உங்களது சுவாசம் மற்றும் உதரவிதான பகுதிகளில் ஏற்படுகின்ற மாறுதல்களால் ஏற்படுகிறது என்கிறார்கள்.
குழந்தைகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது திடீரென்று கத்திக்கொண்டு அழுவார்கள். இதற்கு காரணம் அவர்கள் மனக்கண்ணில் மாயத் தோற்றங்கள் ஏற்படும். அது மட்டுமல்லாமல் விசித்திரமான விலங்குகளோ, உயிரினங்களோ குழந்தை பார்க்க நேரிடுவதால் தான் இது போன்று அழுகிறது.
மேலும் உறக்கத்தில் தொடர்ந்து உங்களுக்கு கனவுகள் ஏற்படும். இந்த கனவுகள் மீண்டும், மீண்டும் உங்களுக்கு அந்த மாதத்தில் திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்த தொடர்புடைய கனவுகள் எதனால் ஏற்படுகிறது என்று இது வரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இன்னும் சில பேர் கனவுக்குள் கனவு காண்பது போல இருப்பார்கள். உறக்கத்தில் அவர்கள் விழித்திருக்க மாட்டார்கள் ஆனால் கனவில் விழித்திருக்கக் கூடிய நிலை அவர்களுக்கு இருக்கும்.
வேறு சிலருக்கு தூக்கத்தில் நடப்பது போன்ற வியாதி இருக்கும். இவர் உறங்கி எழுந்தவுடன் தானாக நடப்பார்கள். அந்த சமயத்தில் இவர்களுக்கு என்ன நடக்கிறது என்பது நினைவில் இருக்காது.
வேறு சிலரோ தன் உடலை விட்டு வெளியே வந்த அனுபவங்களை பெறுவார்கள். இது ஒரு நரம்பியல் நிகழ்வு என்று அறிவியல் அறிஞர்கள் கூறியிருக்கிறார்கள்.
யாரும் இல்லாத சமயத்தில் தூங்கிக் கொண்டிருப்பவர்கள் உறக்கத்திலேயே பேசுவார்கள். இந்த பேச்சானது சுமார் 30 வினாடிகள் வரை இருக்கும். ஆழ்ந்த உறக்கம் இல்லாமல் இருப்பவர்கள் இது போல அடிக்கடி உறங்கும் போது பிதட்டுவார்கள்.
எல்லோரும் உறங்கும் போது நம்மை அறியாமல் உடலுக்குள் நடக்கின்ற விஷயங்கள் தான் என்றாலும் இன்று வரை இதற்கு விடை தெரியாமல் அறிவியலும் திணறி வருகிறது என்று கூறலாம்.