யார் இந்த பரவாணி? தமிழ் கடவுள் முருகனுக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்..
அழகு என்றால் முருகன் என்று பொருள் தரும். முருகன் தொன்று தொட்டு தமிழ் மக்களால் வணங்கப்படக்கூடிய தெய்வமாக திகழ்கிறார். இவர் சிவபெருமானின் மகனாகவும், விஷ்ணுவின் மருமகனாகவும் திகழ்வதோடு எண்ணற்ற சக்திகளை பெற்று அசுரர்களை அழித்த கடவுள்.
ஆறுபடை வீடுகளில் குடியிருக்கும் இந்த முருகனை வழிபடும்போது செவ்வாய் கிரகத்தினால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறையும் என்று கூறியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட இந்த முருகருக்கும் பரவாணிக்கும் இடையே என்ன தொடர்பு உள்ளது? என்பதை பற்றி விரிவாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
பரவாணி என்பது முருகன் உடைய வாகனம். அதுவும் மயில் வாகனம். இந்த பரவாணி என்பவன் சூர பத்மன் என்று கூறுகிறார்கள். ஆரம்ப நாட்களில் இந்த சூர பத்மன் முருகனின் தந்தையாகிய சிவபெருமானை நினைத்து கடுமையாக தவம் செய்து சிவனிடம், சிவனின் வம்சத்தை சேர்ந்தவர்களைத் தவிர வேறு யாரும் தன்னை அழிக்க முடியாது என்ற வரத்தை பெற்றவன்.
அந்த வகையில் இந்த வரத்தைப் பெற்ற அசுரன் பூலோகம் மட்டுமல்லாமல் தேவலோகத்திலும் கடுமையான முறையில் நடந்து கொண்டு அனைவரையும் சித்திரவதை செய்து வரும் வேளையில் இவன் அழிவை எதிர்பார்த்து அனைவரும் காத்திருந்தார்கள்.
1008 அண்டங்களையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த சூரனை வதம் செய்ய சிவபெருமானின் மகனாகிய முருகப்பெருமான் சூரனிடம் போர் செய்ய வரும்போது சூரன் மரமாகி நிற்பான்.
இந்த மரத்தை முருகப்பெருமான் இரண்டாக பிளந்து சூரனை வதம் செய்ததை அடுத்து சூரன் முருகன் சிவனின் வம்சாவளி தனக்கு இறப்பு உறுதி என்பதை உறுதி செய்து கொண்ட பிறகு, தனது ஆணவத்தை அழித்து முருகனிடம் சரண் அடைந்ததோடு மட்டுமல்லாமல் தான் எப்போதும் முருகனுடன் இருக்க வேண்டும் என்ற வரத்தைக் கேட்க, முருகப்பெருமானும் அதற்கு இணங்கி சூரனை பரவாணி எனும் மயிலாக மாற்றி தன்னுடன் வைத்துக் கொண்டார்.
மேலும் 1008 அண்டங்களையும் ஆட்டிப்படைத்த சூரன் தனது மாயை விடுத்து முருகனிடம் சரணடைந்த காரணத்தால் தான் இன்று வரை பக்தர்கள் மத்தியில் பேசப்படக் கூடியவராக திகழ்கிறார். என்றும் பல கோயில்களில் சூர வதம் நிகழ்வதை நாம் பார்க்கலாம்.
அந்த வகையில் திருச்செந்தூரில் நடைபெறும் இந்த திருவிழா பக்தர்கள் மத்தியில் பிரசித்தி பெற்ற ஒரு விழாவாக இன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறது.
இப்போது உங்களுக்கு மிக நன்றாக புரிந்து இருக்கும் யார் இந்த பரவாணி இவருக்கும் முருகனுக்கும் இடையே எப்படிப்பட்ட ஒரு தொடர்பு உள்ளது என்று. இந்த கட்டுரை பற்றிய மேலும் பல கருத்துக்கள் உங்களிடம் இருந்தால் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.