“அத்திப்பழத்தின் மருத்துவ குணங்கள்..!” – இனி மிஸ் பண்ணாம சாப்பிடுங்க..
பொதுவாக பழங்களை உணவில் அதிக அளவு சேர்த்துக் கொள்வதின் மூலம் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தி அதிகம் கிடைப்பதோடு, எளிதில் ஜீரணம் ஆகி உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவி செய்யும்.
அந்த வகையில் அத்திப்பழத்தின் சிறப்புகள் பற்றி இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம். அத்திப்பழம் மரவகையைச் சார்ந்தது. அத்தி மரத்தை பொறுத்தவரை நாட்டு வகை மரம் மற்றும் ஹைபிரிட் என பல வகை மரங்கள் உண்டு.இவை அளவான உயரம் உடைய நடுத்தர மரமாகும்.
இந்த மரம் சுமார் 10 மீட்டர் வரை உயரமாக வளர்கிறது. இந்த மரப்பட்டை சாம்பல் மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படும். அதில் மூன்று நரம்புகள் இருக்கும். இதில் 750 மில்லி கிராம், பொட்டாசியம் 242 மில்லிகிராம், கால்சியம் 35 மில்லி கிராம், கொழுப்பு 300 மில்லி கிராம் உள்ளது.
எனவே 50 கிராம் அளவுள்ள அத்திப்பழத்தில் நார்சத்து 5.8 சதவீதமும், பொட்டாசியம் 3.3 சதவீதமும், கால்சியம் 200 மில்லிகிராமும், இரும்பு 10 மில்லிகிராமும், வைட்டமின் பி3, 3 சதவீதமும் உள்ளது.
மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் 2 முதல் 4 மடங்கு வரை தாது உப்புகளும் அடங்கியுள்ளது. அத்திப்பழத்தை சாப்பிட்டால் அதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கிறது.
மேலும் அத்திப்பழம் மிகச் சிறந்த மருத்துவ குணம் கொண்டதாக உள்ளது. இதனை ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளவர்கள் தினமும் மூன்று வேளை, உலர் அத்தி பழம் ஒன்றை சாப்பிட்டு வந்தால் இரும்பு சத்து அதிகரித்து ஒரே மாதத்தில் ஹீமோகுளோபினின் அளவு ஒரு கிராம் வரை உயரும்.
அதுமட்டுமல்லாமல் கடுமையான ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கும், போதிய ரத்தம் இன்றி இருக்கும் கர்ப்பிணிகளுக்கும் உலர் அத்தி பழம் எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.
செரிமான சம்பந்தமான பிரச்சனைகள் மற்றும் குடலியக்கம் சார்ந்த பிரச்சனைகள் வராமல் தடுக்கக்கூடிய ஆற்றல் இந்தப் பழத்திற்கு உள்ளது.இது சிறு குடல் பெருகுடல் தங்கியிருக்கும் கொழுப்புகளால் சிலருக்கு நோய் ஏற்படும்.அதனை தடுக்கக்கூடிய ஆற்றல் கொண்டது.
அத்தோடு உடலில் தங்கியிருக்கும் நச்சுக்களை வெளியேற்றி குடலை சுத்தமாக்கும். உடலில் புற்று நோய்களைக் கட்டுப்படுத்த கூடிய தரமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிக அளவு அத்திபழம் தரக்கூடிய ஆற்றல் உடையது.
அத்திப்பழத்தை தினசரி சாப்பிட்டால் இரத்தவிருத்தி ஏற்படும்.ஆண்மை பெருக்கும்.எனவே தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கொழு கொழு என்று வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது.
சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. அரைகிராம் காட்டு அத்திப்பழத்தை உண்டு வந்தால் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம் தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும். இதைப் பவுடராக்கி பன்னீரில் கலந்து பூசினால் வெண்புள்ளிகள் மறையும்.