விசுவாசத்தின் அடையாளம் – கோஸ்டயா !!
இந்த உலகிலேயே விசுவாசமான ஜீவன் நாய்கள் தான் என்பதற்கு அடையாளமாக இருக்கும் கோஸ்டயா நாயைப் பற்றிய பதிவுதான் இது.
1995ஆம் ஆண்டில் ரஷ்யாவில் உள்ள டோலயாட்டி எனும் ஊரில் ஒரு கொடூரமான கார் விபத்து ஏற்படுகிறது. அந்த விபத்தில் காரில் பயணம் செய்த தந்தை மகள் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் தப்பித்த ஒரே உயிர், அவர்கள் வளர்த்த ஒரு ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் மட்டுமே.
தன்னை வளர்த்தவர்கள் இறந்து போன விஷயம் தெரியாமல் ஒரே இடத்தில் ஆண்டுக் கணக்கில் அவர்களுக்காக அந்த நாய் காத்திருந்தது. டோலயாட்டி ஊரிலுள்ள பலரும் அந்த நாயை தத்தெடுத்து வளர்க்க முயற்சித்தனர்.
ஆனால் அந்த நாயோ எங்கு சென்றாலும் மீண்டும் விபத்து நடந்த அந்த இடத்திற்கே வந்து தன்னை முதலில் வளர்த்தவர்களை எதிர்நோக்கி காத்திருக்குமாம். இந்த நாயின் விசுவாசத்தை குறிக்கும் விதத்தில் அந்த ஊர் மக்கள் இந்த நாய்க்கு கோஸ்டயா எனப் பெயர் சூட்டினார். ரஷ்ய மொழியில் கோஸ்டயா என்றால் ‘ ‘விசுவாசமான ஜீவன்’ என்று அர்த்தம்.
ஏழு வருடங்களாக ஒரே இடத்தில் தன்னை வளர்த்தவர்களுக்காக காத்திருந்த கோஸ்டயா 2002ஆம் ஆண்டு இறந்து போனது. தன் வாழ்நாள் முழுக்க தன்னை வளர்த்தவர்களுக்காக காத்திருந்து தனது விசுவாசத்தை வெளிப்படுத்திய கோஸ்டயாவை நினைவு கூறும் வகையில் டோலயாட்டி நகரில் கோஸ்டயாவுக்கு ஒரு சிலை அமைக்கப்பட்டிருக்கும்.
இந்தக் கோஸ்டயா நாய் தங்களது நகரத்தில் வசித்ததை எண்ணி தாங்கள் மிகவும் பெருமைப்படுவதாக அந்த ஊர் மக்கள் கர்வத்துடன் கூறுவர். கோஸ்டயா இந்த உலகை விட்டு சென்றாலும் கோஸ்டயாவின் விசுவாசம் பலரையும் காலங்கள் தாண்டி நெகிழ வைத்துக் கொண்டுதான் இருக்கிறது.
இது போன்ற பதிவுகளுக்கு Deep Talks தமிழுடன் இணைந்திருங்கள்.