கூடு விட்டு கூடு பாயும் சித்தர்கள் பற்றிய ரகசியம்..! – மெய்யாலுமா?
சிறு வயதில் நாம் படித்த புத்தகங்களில் கூடுவிட்டு கூடு பாயக்கூடிய மந்திரவாதிகள் பற்றிய விஷயங்களை படித்து நமக்குள் ஒரு வித பயம் கலந்த பிரம்மிப்பு ஏற்பட்டிருக்கும்.
அதுமட்டுமல்லாமல் விட்டலாச்சாரியார் படத்தில் ஒரு உடலில் இருந்து உயிர் பிரிந்து மற்றொரு உயிருக்குள் நுழைந்து பண்ணும் அட்டகாசங்களை பார்த்து நாம் ஏற்கனவே பயந்து இருப்போம்.
இதுபோன்ற கூடு விட்டு கூடு பாயும் வித்தையை சித்தர்கள் செய்திருக்கிறார்களா என்று நாம் எண்ணும்போது அது வியப்பாகவே உள்ளது.
மிகச்சிறந்த சித்தர்களின் ஒருவனால் ஒருவரான திருமூலர் மாடு மேய்க்கும் ஆயர் குல இளைஞன் ஒருவனின் உடலுக்குள் புகுந்து, அவனது பசு கூட்டத்திற்கு ஆறுதல் அளித்துவிட்டு மீண்டும் தன் உடம்புக்கு வந்த பிறகு திருமந்திரம் என்ற நூலை நமக்குத் தந்த கதை அனைவருக்கும் தெரியும்.
இதுபோலவே அருணகிரிநாதரும் கிளி வடிவம் எடுத்துக்கொண்டு கோபுரத்தில் தங்கி இருந்ததை பெரியவர்கள் பலர் சொல்லி கேள்விப்பட்டிருப்போம்.
இப்போது இந்த கூடுவிட்டு கூடு பாய்தல் எப்படி நடக்கிறது, என்பது ஒரு பக்கம் இருந்தாலும் அதனால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.
கடுமையான தவத்தினை செய்வதற்கு ஞானிகள் அனைவரும் ஒரு ஜீவனில் தங்களது உயிரை செலுத்தி விடுவதின் மூலம் யாருடைய தொந்தரவும் இல்லாமல் நீண்ட காலம் தபசு இருக்க முடியும் என்பதால் தான் இந்த கலையை கற்றுத் தந்திருக்கிறார்கள். மேலும் தங்களது தவசுக்கு உடல் தடையாக இருந்தால் அதில் இருந்து விலகி மற்றொரு உருவில் அவர்களால் தவம் இயற்ற முடியும்.
இது சாத்தியம் ஆக வேண்டுமென்றால் குண்டலினி பயிற்சியை தீவிர படுத்தினால் நம் உடம்பில் இருக்கக்கூடிய உயிர் சக்தியை எந்த பகுதிக்கு வேண்டுமானாலும் நம்மால் எடுத்துச் செல்ல முடியும். ஏன் அதை உடலுக்கு வெளியேயும் நம்மால் கொண்டு செல்ல முடியும்.
எனவே யோகப் பயிற்சியை மேற்கொண்ட மிகப் பெரிய மகான்களால் இதை சர்வ சாதாரணமாக செய்ய முடியும் என்பது பலரது எண்ணமாக உள்ளது. ஆனால் அது உண்மைதான் கூடு விட்டு கூடு பாயக் கூடிய திறன் சித்தர்களிடையே காணப்பட்டது.