“ராஜராஜ சோழனின் கஷ்டத்தை தீர்த்தாரா..!”- காய சித்தர் கருவூராரின் புராண ரகசியங்கள்..!
சித்தர்கள் என்பவர்கள் 18 பேர் இருக்கிறார்கள் என உங்களுக்கு நன்றாக தெரியும். இதில் சன்மார்க்க சித்தர்கள், ஞான சித்தர்கள், காய சித்தர்கள் என இவர்களை மூன்று வகையாக பிரித்திருக்கிறார்கள்.
காய சித்தர் கருவூரார் சித்தரை மாதம் அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர். மேலும் இவர் 300 வருடம் 42 நாட்கள் உயிர் வாழ்ந்ததாக தெரிய வருகிறது. இந்த சித்தர் கருவூர்த்தேவர் என்று ஆரம்ப காலத்தில் அழைக்கப்பட்டவர். கொங்கு நாட்டில் உள்ள கருவூரில் பிறந்தவர்.
இவரின் இயற்பெயர் என்ன என்று தெரியவில்லை. எனினும் இளமையிலேயே வேத ஆகமங்களை கற்று தேர்ச்சி பெற்றதால் கருவூரார் என்ற பெயரை பெற்றார். உலக வாழ்க்கையில் பற்றற்று இருந்த இவர் போக முனிவரை குருவாக கொண்டு உபதேசம் பெற்றவர்.
தமிழ் இலக்கிய வரலாற்றில் கருவூரான் சித்தர் கருவூரனார் தேவர், எனும் பெயரில் இவர் அழைக்கப்படுகிறார். மேலும் ஒன்பதாம் திருமுறையில் உள்ள திருவிசைப்பா பாடல்களையும், சித்தர் பாடல்களையும் ஒப்பிட்டால் இருவரும் ஒருவர் என்பதை புரிந்து கொள்ளலாம்.
கரூரில் உள்ள ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோயிலின் தென் மேற்கு மூலையில் இவருக்கு என்று தனி சன்னதி அமைந்துள்ளது. போகர் கூறிய வார்த்தைகளைக் கேட்டு கருவூராரின் குலதெய்வம் அம்பாளை தினம் தோறும் வழிபட்டு உபதேசம் உபதேசித்து வந்தார்.
ஒருமுறை திருநெல்வேலி சென்று நெல்லையப்பரை வணங்கி நெல்லையப்பர் வருக.. வருக.. என அழைக்க நெல்லையப்பர் கருவூராருக்கு எந்த பதிலும் அளிக்காமல் காட்சி தராமல் இருந்திருக்கிறார். இதனால் கோபம் கொண்ட கருவூரார் ஈசன் இங்கு இல்லை எருக்கம், குறுக்கும் இங்கு எழுக என்று சாபம் இட்டு மானூர் நோக்கி நடந்தார்.
இந்த சூழ்நிலையில் சிவ தொண்டராக நெல்லையப்பரே வந்து கருவூராரை அழைத்துச் சென்றிருக்கிறார். பிறகு கோபம் தணிந்த சித்தர் மானூர் வந்து காட்சி தந்து சாப விமோசனம் பெறலாம் என்று ஈசனிடம் கூறி விடை பெற்றாராம்.
அடுத்து நெல்லையப்பரும் காந்திமதி அம்பாளும், மானூர் சென்று கரூர் சித்தரை தரிசிக்க அவர் ஜோதி மையமாக காட்சி அளித்திருக்கிறார். பின்னர் கரூர் சித்தர் நெல்லைக்கு வந்து இங்கும் ஈசன் உள்ளார். எருக்கும், குறுக்கும் அருக என்று நெல்லையப்ப சுவாமிக்கு சாப விமோசனம் வழங்கியிருக்கிறார்.
மேலும் இவர் வட திசையில் இருக்கின்ற பல நாடுகளுக்கு சென்றிருக்கிறார். அது மட்டும் அல்லாமல் காசி காஞ்சி காலகத்தி திருவண்ணாமலை சிதம்பரம் போன்ற தளங்களுக்கு சென்று கடவுளை வழிபட்ட பின் பாண்டிய நாட்டில் மதுரை ராமேஸ்வரம் போன்ற நகரங்களுக்கு சென்று அங்கு இருக்கும் தெய்வங்களை வணங்கி இருக்கிறார்.
இதனை அடுத்து திருச்செந்தூர் முருகனை வழிபட்ட பின்னர், கன்னியாகுமரி, சுசீந்திரம் ஆகிய தளங்களுக்கு சென்று இருக்கிறார். திருநெல்வேலி அருகே இருக்கும் திருப்புடை மருதூரில் ஈசனை போற்றிப் பாடி இருக்கிறார்.
இந்தப் பாடலை அவர் பாடும் போது வன்னி மரத்திலிருந்து மீன் மழை பொழிந்ததாக வரலாறுகள் கூறுகிறது. தஞ்சையில் இருக்கும் பெரிய கோவிலில் கும்பாபிஷேகம் நடக்கும்போது அஷ்ட பந்தன மருந்து இறுகாமல் இருந்தது.
இதனை அடுத்து போகநாதர் என்ற நபர் காக்கையின் காலில் ஓலையில் செய்தியை எழுதி கருவூர் தேவருக்கு அனுப்பி வைத்தார். இதனை அடுத்து கருவூரார் கோவிலுக்கு வந்து தனது வலிமையால் அஷ்டபந்தன மருந்தை தயார் செய்து கொடுக்க, அது இறுகி உறுதியாக நின்றது. மேலும் இவரது அறிவுரையை கேட்டு தான் ராஜராஜ சோழன் இந்த பெரிய கோயிலை கட்டியதாக சில வரலாறுகள் கூறுகிறது.
மேலும் தஞ்சை பெரிய கோவிலில் கருவூரருக்கு என்று தனியாக சன்னதியும் உள்ளது. இவரது சீடர் தான் இடைக்காடர். கருவூரார் கடுமையான தவம் செய்ததன் பலனாக எட்டு வகை சித்திகளை பெற்றார். அது மட்டுமல்லாமல் கருவூரார் அழைத்தால் ஈசனே உடனடியாக தரிசனம் கொடுக்க வேண்டிய சித்தியையும் பெற்றிருந்தார்.
கருவூர் சித்தருக்கு வசியம், மோகனம், தம்பனம், உச்சாடனம்,ஆக்ருசணம், பேதனம், மரணம் போன்ற அஷ்டகர்ம மந்திரங்கள் அத்துபடி எனக் கூறலாம். மேலும் இந்த சித்தர் பல நூல்களை எழுதி இருக்கிறார்.
அந்த வரிசையில் வாத காவியம், வைத்தியம், யோகம் ஞானம், பல திரட்டு, குருநூல் சூத்திரம், மெய்ச் சுருக்கம், கற்ப விதி, மூப்புச்சூத்திரம், நொண்டி நாடகம், மூலிகை தைல விவரம், கர்ப்பக்கூறு, அட்டமா சித்தி போன்ற நூல்களை இதற்கு உதாரணமாக கூறலாம்.
சனியின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் கருவூரார் சித்தர் வழிபாடு செய்வதின் மூலம் சனியின் தாக்கத்தை குறைத்துக் கொள்ளலாம். ஜென்ம சனி மற்றும் அஷ்டம சனி காலங்களில் படாத பாடுபட்டு ஜோதிடத்தை நம்புவார்கள், இந்த சித்தரை வழிபடுவதின் மூலம் சனியின் தாக்குதலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளலாம்.