“ஜேம்ஸ் வெப் (James Webb) தொலைநோக்கி அனுப்பிய புகைப்படம்..!” – மண்டையைப் பிய்த்துக் கொள்ளும் விஞ்ஞானிகள்..
இது வரை பல்லாயிரக்கணக்கான விண்வெளி புகைப்படங்களை அனுப்பி இருக்கும் ஜேம்ஸ் வெப் (James Webb) டெலஸ்கோப் ஆனது, தற்போது அனுப்பி இருக்கும் புகைப்படத்தை பார்த்து விஞ்ஞானிகள் மண்டையை பிடித்துக் கொள்கிறார்கள் என்றால் உங்களுக்கு ஏன் என்ற சந்தேகம் ஏற்படும்.
மேலும் படு வித்தியாசமான சுவாரசியமான புகைப்படங்களை அனுப்புவதில் இந்த டெலஸ்கோப்க்கு ஈடு இணையாக எதுவும் கூற முடியாது.
இதனை அடுத்து தற்போது இந்த தொலைநோக்கி வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படமானது சர்ச்சைகளை ஏற்பட்டு விட்டதோடு மட்டுமல்லாமல் அந்த புகைப்படத்தில் இருக்கும் கேள்விக்குறியை பார்ந்து அது எதனால் ஏற்பட்டது என்று பலரும் பல விதமான கருத்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் புகைப்படத்தை பார்க்கும் போது அந்த புகைப்படத்தில் நட்சத்திர மண்டலங்களுக்கும் மத்தியில் ஒரு கேள்வி குறி தென்படும். இந்த கேள்விக்குறி தான் தற்போது ஆராய்ச்சியாளர்களின் மத்தியில் பலவித எண்ணங்களை கிளர்ந்து எழ வைத்துள்ளது.
இதுபோல ஒரு கேள்விக்குறியை ஆராய்ச்சியாளர்கள் இதுவரை பார்த்ததே இல்லை. எனவே ஏலியன்கள் கூட இதுபோன்ற கேள்விக்குறியை ஏற்படுத்தியிருக்கலாம் என்ற கோணத்தில் சிலர் அவர்களது கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.
வேறு சிலரோ வானத்தில் ஏதேனும் ஒரு புதிய நட்சத்திரம் உருவாகும் போது இது போன்ற அமைப்பு நிகழ்ந்திருக்கலாம் என்றும் ஒரு புதிய நட்சத்திரம் உருவாக தன்னைச் சுற்றி இருக்கும் தூசிகள் முழுவதையும் எடுத்துக்கொண்டு உள்வாங்கி தான் அது புதிய நட்சத்திரமாக உருவாகும்.
இது ஒரு புதிய நட்சத்திரம் உருவாகக்கூடிய தன்மைகளோ அல்லது எரி நட்சத்திரம் ஆகவோ இருக்கலாம் என்று பல்வேறு வியூகங்களை கூறிவரும் நிலையில் இரண்டு கேலக்ஸிகள் ஒன்றாக இணையக்கூடிய நிகழ்வாகவும் இது இருக்கலாம். இதைத்தான் ஜேம்ஸ் வெப் படம் பிடித்து இருக்கலாம் என்று சில விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
இரண்டு கேலக்ஸிகள் இணையும் போது பல்வேறு வடிவங்கள் ஏற்படலாம்.மேலும் பால்வெளி மண்டலமும் மற்றும் ஆன்ட்ரோமிடா மோதும் போது இதுபோன்ற வித்தியாசமான வடிவங்கள் தோன்றுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளதாக பேசப்படுகிறது.
இது போன்ற சூழ்நிலை உள்ள சமயத்தில் ஜேம்ஸ் வெப் புகைப்படத்தை எடுத்து இருக்கலாம். எவ்வளவோ புகைப்படங்களை இந்த டெலஸ்கோப் எடுத்து இருந்தாலும் இந்த கேள்விக்குறியை போல் உள்ள புகைப்படம் தான் பேசும் புகைப்படமாக உள்ளது என கூறலாம்.