“இரும்புச்சத்து அதிகம் இருக்கும் உணவுகள்..!” – பெண்கள் அவசியம் சேர்க்க வேண்டியது..
இரும்பு சத்து என்பது பெண்களுக்கு மிக இன்றியமையாத ஒன்று. அதிலும் நம் நாட்டில் இரும்பு சத்து குறைபாடு காரணமாக பலவிதமான பாதிப்புகளுக்கு பெண்கள் உள்ளாகிறார்கள். சிறு பெண் குழந்தைகள் முதல் பெரிய பெண்கள் வரை இந்த பாதிப்பிலிருந்து மீண்டு வர இயற்கையான வழியை பின்பற்றுவதின் மூலம் நல்ல நன்மையை பெற முடியும்.
இரும்பு சத்தினை பெறுவதற்காக உணவில் சில முக்கிய பொருட்களை நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். அந்த வகையில் கீரையில் இருக்கக்கூடிய சத்தை விட அதிக அளவு இரும்பு சத்து உள்ள பொருட்கள் என்ன என்பதை விரிவாக இந்த கட்டுரையில் படிக்க தெரிந்து கொள்ளலாம்.
அந்த வகையில் ஆப்ரிகாட் பழத்தில் கீரையில் இருப்பதை விட அதிக அளவு இரும்பு சத்து காணப்படுகிறது 2.7 மில்லி கிராம் அளவு இரும்பு சத்து காணப்படுகிறது. டார்க் சாக்லேட்டில் இரும்பு சத்து மிக அதிக அளவில் காணப்படுகிறது. இது ஒரு கப் கீரையில் இருக்கக்கூடிய அளவை விட அதிகமாகும்.
சியா விதைகளில் சுமார் 7.72 மில்லி கிராம் அளவு இரும்பு சத்து 100 கிராம் அளவுள்ள சியா விதையில் காணப்படுகிறது. எனவே கட்டாயம் சியா விதைகளை நீங்கள் தினமும் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் இரும்பு சத்து குறைபாட்டை எளிதில் நீக்க முடியும்.
கொண்டைக்கடலையில் சுமார் 4.7 மில்லி கிராம் இரும்புச்சத்து காணப்படுகிறது. எனவே தினமும் உணவில் கொண்டைக்கடலையை சேர்த்து வருவதின் மூலம் எளிதில் இரும்பு சத்து கிடைக்கும். முந்திரியில் 100 கிராம் அளவு நீங்கள் எடுத்துக் கொண்டால் 6.68 கிராம் அளவு இரும்பு சத்து உள்ளது.
அது போலவே அசைவ உணவுகளில் கோழி தொடைகளில் சுமார் 1.3 மில்லி கிராம் அளவு இரும்பு சத்து உள்ளதாக தெரிகிறது. குயினோவாவில் புரதம் மற்றும் நார் சத்து இருப்பதோடு சுமார் 2.8 மில்லி கிராம் அளவு இரும்பு சத்து காணப்படுகிறது.
பூசணி விதைகளில் 2.5 மில்லி கிராம் இரும்பு சத்து காணப்படுகிறது. 90 கிராம் சமைத்த சிப்பிகளில் சுமார் 8 மில்லி கிராம் இரும்புச்சத்து உள்ளது. பருப்பில் புரதம் மற்றும் நார்ச்சத்து இருப்பதோடு 6.6 மில்லி கிராம் அளவு இரும்பு சத்து உள்ளது.
எனவே முடிந்தவரை மேற்கூறிய உணவுகளை நீங்கள் உங்கள் உணவுகளில் தினமும் சேர்ப்பதின் மூலம் இரும்பு சத்து பற்றாக்குறையை எளிதில் நீக்கி விட முடியும்.