• November 21, 2024

OK – என்ற வார்த்தைக்குள் மறைந்திருக்கும் சுவாரஸ்யமான விஷயங்கள்..!!

 OK – என்ற வார்த்தைக்குள் மறைந்திருக்கும் சுவாரஸ்யமான விஷயங்கள்..!!

ok

நாம் எவ்வளவோ, வார்த்தைகளை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துகிறோம். அதில் குறிப்பாக ஓகே என்ற வார்த்தையை எந்த இடத்திலும் எளிமையாக பயன்படுவது வழக்கமான விஷயமாக உள்ளது.

 

அந்த வகையில் இந்த ஓகே என்ற சொல் எப்படி பிறந்தது. அதனுடைய சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன என்பது பற்றி இந்த கட்டுரையில் விரிவாகவும், விளக்கமாகவும் பார்க்கலாம்.

ok
ok

என்ன மச்சி ஓகே-வா என்று கேட்கக்கூடிய, இந்த ஓகே என்ற வார்த்தையின் பயன்பாடானது 182 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது. அதாவது 1839 ஆம் நாள் ஆண்டில் தொடங்கப்பட்டது.

 

இது Olla Kalla என்ற கிரேக்க வார்த்தையில் இருந்து தான் இந்த ஓகே என்ற இரண்டு எழுத்து வார்த்தை உதயமானது. இந்த வார்த்தையானது அமெரிக்க பத்திரிக்கையாளர் சார்லஸ் கார்டன் கிரீனின் அலுவலகத்தில் தொடங்கியது.

 

எழுத்தாளர்கள் எப்படி சுருக்கு எழுத்தை பயன்படுத்துவார்களோ, அது போல All right என்று பொருள்படக்கூடிய இதை oll wright என அழைத்தார்கள்.

Martin Van Buren
Martin Van Buren

இதனை அடுத்து இந்த ஓகே என்ற இரட்டை எழுத்து தேர்தலில் 1840 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி மார்டின் வான் ப்யூரனின் மறு தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தப்பட்டது. இதன் மூலம் இந்த இரட்டை வார்த்தை உலகம் முழுவதும் படு வேகமாக பிரபலமானது.

 

மேலும் இதன் மூலம் நாடு முழுவதுமே ஓகே கிளப்ஸ் உருவானது. இந்த வார்த்தையானது பூர்வீக அமெரிக்க இந்திய பழங்குடியான சோக்டாவின் (Choctaw) okeh என்ற வார்த்தையில் இருந்து தான் உருவாக்கப்பட்டது.

ok
ok

இதில் ஓகே (okay) எனும் சொல் தான் சரியானது. ஆனால் மக்கள் இன்று அதனை ok என்று பயன்படுத்துவது தவறாக கருதப்படுகிறது.

 

மேலும் இந்த வார்த்தையானது பெயரிடை அல்லது வினை உரிச்சொல் இரண்டுக்கும் பயன்படுவதாக உள்ளது. நீங்கள் எதையும் சம்மதிப்பதற்கு இந்த வார்த்தையை எளிதில் பயன்படுத்தலாம்.

 

இப்போது உங்களுக்கு மிக தெளிவாக புரிந்து இருக்கும் இந்த ஓகே என்ற வார்த்தைக்குள் இத்தனை விஷயங்கள் புதைந்துள்ளதா என்று. எனவே இனி மேல் ஓகே என எழுதும் போது okay என எழுதவும்.