காசு, பணம், மணி, துட்டு… பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்…
ஒவ்வொரு நாளும் மனிதன் கடுமையாக உழைக்கின்றான் என்றால், அதற்குக் காரணம் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை ஆவது சேமிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான்.
நமது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய சக்தி இந்த பணத்திற்கு இருப்பதோடு, பணம் பாதாளம் வரை பாயும் என்று சொல்லும் சொல்லும் உண்மையாகவே உள்ளது.
அப்படிப்பட்ட இந்த பணத்தைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பற்றி தான் இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கப் போகிறோம்.
இந்தியாவில் இன்று அதிக மதிப்புடைய ரூபாய் என்றால் அது ஆயிரம் ரூபாயாக தான் இருக்கும். ஆனால் 1954 முதல் 1978 வரை உள்ள காலகட்டத்தில் 5000 மற்றும் 10000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்துள்ளது.
இதனை அடுத்து கருப்பு பணம் புழங்குவதை தடுப்பதற்காக, இதனுடைய புழக்கத்தை முற்றிலும் தடை செய்து விட்டது ரிசர்வ் வங்கி. இதனை அடுத்து 1946 ஆம் ஆண்டிலேயே கணக்கில் வராத பணத்தினை ஒழிப்பதற்காக ஆயிரம் மற்றும் பத்தாயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டது. மீண்டும் இது 1954 இல் நடைமுறைக்கு வந்தது.
நேபாள் நாட்டில் இந்திய அரசால் வெளியிடப்பட்டிருக்கும் 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமா ஒரு காலத்தில் இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட ஐந்து ரூபாய் நாணயங்களை பங்களாதேஷ் நாட்டிற்கு பிளேட் செய்வதற்காக கடத்தப்பட்டு இருப்பதை அறிந்து ரிசர்வ் வங்கி அதிர்ச்சிக்கு உள்ளானது.
இந்திய ரூபாய் நோட்டுகள் கிழிந்து விட்டாலோ, அல்லது 55% க்கு மேல் பழுதடைந்து இருந்தால் வங்கிகளில் எந்த தடையும் இன்றி நீங்கள் மாற்றிக் கொள்ளலாம்.
பதினெட்டாம் நூற்றாண்டில் தான் காகிதத்தால் ஆன நாணயம் இந்தியாவில் வெளியிடப்பட்டது. மேலும் பேங்க் ஆப் பம்பாய் மற்றும் பேங்க் ஆப் மெட்ராஸ் ஆகிய தனியார் வங்கிகள் காகிதலான பணத்தை அச்சிட்டது.
1935 ல் ரிசர்வ் பேங்க் இந்தியா நிறுவப்பட்டது இதன் முன்பு வரை காகித பணம் அச்சிடும் உரிமையை இந்திய அரசாங்கம் பெற்றிருந்தது.
இந்திய ரிசர்வ் வங்கி முதல் முதலாக அச்சடிக்கப்பட்ட முதல் காகித பணம் ரூ 5 தான் இது 1938 ஆம் ஆண்டு அச்சடிக்கப்பட்டது.
இந்த சுவாரசியமான கட்டுரை உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். அப்படி பிடித்திருந்தால் எங்களை ஊக்கப்படுத்த நீங்கள் உங்கள் கருத்துக்களை பதிவிடலாம்.