நீரில் மூழ்கும் அபாயத்தில் நியூயார்க்..! – அதிர்ச்சி தகவலை வெளியிட்ட நாசா..
அமெரிக்காவில் மிக முக்கிய நகரங்களில் ஒன்றாக திகழக்கூடிய நியூயார்க் நகரம் கடலில் மூழ்க வாய்ப்புகள் உள்ளதாக நாசா தகவலை வெளியிட்டு கடுமையான அதிர்ச்சியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி விட்டது.
இந்த பூமி தோன்றிய பிறகு மனிதன் இயற்கைக்கு மாறாக புதிய புதிய கண்டுபிடிப்புகளை, கண்டுபிடிப்பதாக எண்ணி பூமியின் சூழலில் பல மாற்றங்களை ஏற்படுத்தி விட்டார்கள். இதன் காரணமாக பூமியின் பருவ நிலையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
உலக வெப்பமயம் காரணமாக பனிப்பாறைகள் உருகுவதின் விளைவாக, கடல் நீர்மட்டம் ஆண்டு தோறும் குறிப்பிட்ட அளவு அதிகரித்து வருகிறது. இவ்வாறு கடலின் நீர்மட்டம் உயரும் போது கடற்கரைக்கு அருகில் உள்ள முக்கிய நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்படலாம் என நாசா விஞ்ஞானிகள் கணித்திருக்கிறார்கள்.
இது நிமித்தமாக அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா ஒரு அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் நியூயார்க் நகரின் பெரும் பகுதிகள் அதிகளவு கட்டிடங்களால் தற்போது நிறைந்து உள்ளது.
மேலும் இங்கு நிலத்தடி நீர் குறைவாக மாறிவரும் சூழ்நிலையில், இந்த நகரானது விரைவில் நீரில் மூழ்குவதற்கான சாத்திய கூறுகள் உள்ளதாக தெரிவித்திருக்கிறார்கள்.
தெற்கு கலிபோர்னியாவில் உள்ள நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் மற்றும் நியூ ஜெர்சியில் உள்ள ரட்ஜர்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், இந்த தகவல்களை தங்கள் ஆய்வின் மூலம் தெரிவித்து இருக்கிறார்கள்.
நிலத்தில் இடைவிடாமல் கட்டி வரும் அதிக அளவு கட்டிடங்களின் காரணத்தால் நிலத்தின் உயரம் குறைந்து வருவதாகவும், சராசரியாக பெருநகரப் பகுதிகள் ஆண்டுக்கு 1.6 மில்லி மீட்டர் அளவுக்கு குறைந்திருப்பதாக நாசா தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
எனவே கடற்கரைக்கு அருகில் இருக்கக்கூடிய பகுதிகள் விரைவில் நீருக்குள் மூழ்கும் அபாயம் இருப்பதால் பூமியை மாசு இல்லாமல் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், வெப்பநிலை அதிகரிக்காமல் இருக்க என்னென்ன யுக்திகள் உள்ளதோ அவற்றை கடைபிடிப்பது மிகவும் சிறப்பானதாக இருக்கும்.
தற்போது புவி வெப்பமடைதல் என்ற சொல்லுக்கு மாற்றாக புவியின் கொதிநிலை என்ற வார்த்தைகளை பயன்படுத்த விஞ்ஞானிகள் ஆரம்பித்து விட்டார்கள். இது புவி வெப்பம் அடைவதை விட மிக கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.
எனவே அதிக அளவு மரங்களை நடுவதின் மூலமும் குறும் காடுகளை எவ்வளவு சீக்கிரம் ஏற்படுத்த முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் நாம் கட்டமைப்பின் மூலம் ஓரளவு இது போன்ற அபாயத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.