
Pamban Bridge
இந்தியாவின் மிகப் பெரிய கடல் பாலங்களில் இரண்டாவது இடத்தில் பாம்பன் பாலம் உள்ளது. இந்தப் பாம்பன் பாலத்தின் மொத்த நீளம் 2.3 கிலோ மீட்டர். பழைய வரலாற்று புத்தகத்தின் படி இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள ஷத்திரிய வம்சத்தை சேர்ந்த மக்களால் இந்த பாலம் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது .
மேலும் இந்த பாலத்தில் 18,000 டன் ஜல்லி, 5000 டன் சிமெண்ட், 18,000 டன் இரும்பு ஆகியவற்றை கொண்டு கட்டப்பட்ட இந்த பாலத்தை கடலில் எழுப்பப்பட்டுள்ள 145 தூண்கள் தாங்கிப் பிடிக்கின்றன.

இந்த பாலம் கட்டப்பட்டுள்ள இடம் உலகிலேயே இரண்டாவதாக அதிக துருப்பிடிக்கும் இடமாகும். இன்று வரை வலிமையுடன் நிமிர்ந்து நிற்கிறது என்றால் அதற்கு காரணம் மிகவும் சிறப்பான முறையில் கட்டுமானம் செய்யப்பட்டது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.
மேலும் 1964 ஆம் ஆண்டு தனுஷ்கோடியை புயல் தாக்கியபோது கூட இந்தப் பாலத்தின் இரும்பு பகுதி கடுமையாக சேதமடைந்தது. இதனை அடுத்து போக்குவரத்து சில காலம் தடைப்பட்டது.
பின்னர் 45 நாட்களில் பாலம் சரி செய்யப்பட்டு போக்குவரத்து தொடங்கப்பட்டது. பாக் ஜலசந்தி கடலையும், மன்னார் வளைகுடா கடலையும் இப்பாலம் இணைக்கிறது.
Unlimited High-Quality Audiobooks
Best Devotional Audiobooks
Listen to spiritual and devotional content for peace of mind. Perfect for daily prayers and meditation.
Listen DevotionalCrime Series
Immerse yourself in thrilling crime investigations and mysteries. Every episode brings new excitement.
Rajesh Kumar Collection
Enjoy the complete collection of Rajesh Kumar's best works in high-quality audio format.
Listen Nowபாம்பன் கடல் இதன் நடுவில் ராமேஸ்வரம் தீவை இணைக்கும் வகையில் பாம்பன் பாலம் அமைந்துள்ளது. மேலும் இயற்கையாக கால்வாய் அமைந்துள்ளது.

இதன் வழியாக கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு வரை ராமேஸ்வரம் பாம்பன் துறைமுகங்களில் இருந்து உள்நாட்டு துறைமுகங்கள் மற்றும் இலங்கைக்கு போக்குவரத்து நடைபெற்று உள்ளது.
இந்தப் பாலத்தின் கீழே கப்பலும் மேலே ரயிலும் செல்லும் வகையில் 1899 இல் டபுள் லீப் கேண்டிலிவர் பிரிட்ஜ் பாலம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதற்காக 1902 ஆங்கில அரசால் முறையான அறிவிப்பும் செய்யப்பட்டது. குறிப்பாக வர்த்தக போக்குவதற்காகவே பாம்பன் கடலில் பாலம் கட்ட பிரிட்டிஷ் அரசு முடிவு செய்தது.
ராமேஸ்வரத்திற்கு பேருந்து பாலம் முதல் முதலாக இரண்டாம் தேதி அக்டோபர் 1988 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இதற்கு இந்திரா காந்தி பேருந்து மேம்பாலம் என்ற பெயரில் சூட்டப்பட்டு அந்தப் பெயராலேயே அழைக்கப்படுகிறது.

மேலும் மேம்பாலத்தில் இருந்து அருகில் உள்ள தீவுகளையும் பாலத்தில் செல்லும் ரயில் பாலத்தை காணமுடியும். இத்தகைய சிறப்பு வாய்ந்த பாம்பன் பாலத்திற்கு 100 வயதுக்கு மேல் ஆகிறது.
2014 ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி இதன் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. பழந்தமிழர் வரலாற்றைப் பதிவு செய்யும் விதமாக கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் பாம்பன் பாலத்தை இன்னும் பல நூற்றாண்டுகள் வாழ்க என வாழ்த்துவதும் இதனைப் பாதுகாப்பது நமது கடமையாகும்.