‘மத சடங்குகளில் எதற்காக எலுமிச்சை..!” – ஷாக் ஆகாமல் படியுங்கள்..
இந்துமத சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் முக்கிய இடம் பிடித்திருக்கும் எலுமிச்சை பழத்தை நாம் தேவ கனி என்று அழைக்கிறோம். இந்த தேவ கனியான எலுமிச்சை மங்களக் காரியங்களில் மிக முக்கிய பங்கு வகிப்பதோடு, கலாச்சார நிகழ்வுகளிலும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.
சமஸ்கிருத மொழியில் எலுமிச்சை “நிம்பு பலா” என்று அழைக்கிறார்கள். மேலும் இந்த பழமானது சக்தி வாய்ந்த நன்மைகளை மனித இனத்திற்கு கொடுக்கிறது.
வீட்டில் மட்டுமல்லாமல் எந்த இடத்திலும் இருக்கும் எதிர்மறை ஆற்றலை தகர்த்து எறிய கூடிய ஆற்றல் கொண்ட எலுமிச்சை சிட்ரஸ் இனத்தை சேர்ந்தது. புராண காலங்களில் இந்த பழத்தை ராஜபழம் என்று கூறி அழைத்திருக்கிறார்கள்.
நிம்பா அசுரன் என்று அழைக்கப்பட்ட ஒரு சக்தி வாய்ந்த அசுரன் பஞ்சத்தை ஏற்படுத்தி மக்களை வதைக்கிறார். இதனை அடுத்து உலகமே ஒரு பேரழிவை சந்திக்க வேண்டிய சூழ்நிலையை சந்திக்கிறது. அப்போது இந்த அசுரனின் ஆட்டத்தை அடக்க முனிவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு சக்தியை பிரார்த்தனை செய்கிறார்கள்.
இதனை அடுத்து மனமகிழ்ந்த சக்தி நிம்பா சூரனை கொன்று, பஞ்சத்தைப் போக்கி மக்களை காத்ததாக கூறப்படுகிறது. எனவே தான் தேவியை சாகம்பரி என்று அழைக்கிறார்கள். சாகம்பரி என்பதற்கு மனித குலத்தை பழங்கள் மற்றும் காய்கறிகளால் ஊட்டம் அளித்து காத்தவள் என்று பொருள்.
இதனை அடுத்து இந்த நிம்பாசூரன் தான் நிம்பு பலா என்ற பழ வடிவத்தில் மக்களால் பூஜிக்க படக்கூடிய வரத்தை தேவியிடமிருந்து பெற்றார் என்று கூறுகிறார்கள்.
எனவே தான் எலுமிச்சை பழம் இந்து சமயத்தின் ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மக்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற கடவுளுக்கு எலுமிச்சை மாலையை சாற்றி வணங்குகிறார்கள்.
மேலும் இந்த பழத்திற்கு கோபத்தை கட்டுப்படுத்த கூடிய ஆற்றல் இருப்பதோடு, தீய கண் திருஷ்டிகளை நீக்கக்கூடிய சக்தியும் உள்ளதாக சொல்லப்படுகிறது. எந்தவித பரிகாரத்திற்கும் முதலாவதாக இருக்கும் எலுமிச்சை இந்து மத வழிபாட்டில் ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளது.
எனவேதான் எலுமிச்சை பழம் அளப்பரிய ஆற்றல் நிறைந்த பழமாக விளங்குகிறது. மேலும் உங்களுக்கு இந்த பழம் பற்றிய வேறு தகவல்கள் தெரிந்திருந்தால் அவற்றை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.