• September 8, 2024

உங்கள் மூளையை எப்போதும் ஆக்டிவாக வைத்துக் கொள்ள இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..

 உங்கள் மூளையை எப்போதும் ஆக்டிவாக வைத்துக் கொள்ள இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..

Brain

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மனிதரும் தனக்கு என்று கிடைத்திருக்கும் பணியை சிறப்பாக செய்ய மூளையின் பயன்பாடு மிகவும் முக்கியமான ஒன்று. மூளை சோர்வு அடையாமல் எப்போதும் ஆக்டிவாக இருந்தால் மட்டுமே நல்ல திட்டங்களையும், நல்ல செயல்களையும் மிக நேர்த்தியான முறையில் நாம் செயல்படுத்த முடியும்.

அப்படி மூளை சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால் ஒவ்வொரு மனிதனின் மனநிலை மிகச் சிறிய முறையில் இருக்க வேண்டும். எந்த ஒரு தடுமாற்றமும் இல்லாமல் தெளிந்த நீரோடை போல மனநிலை இருக்கும் பட்சத்தில் உங்கள் மூளையில் எந்த விதமான பிரச்சனைகளும் ஏற்படாது.

Brain
Brain

உங்கள் மனநிலை மிகவும் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் உடல் ஆரோக்கியமும், சுறுசுறுப்பாக இருக்கும். மூளையின் செயல்பாடும் அதிகரிக்கும்.

மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க அவசியம் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்வதின் மூலம் மூளைக்கு இரத்த ஓட்டம் அதிகம் ஆகும் மற்றும் புதிய நியூரான்களின் வளர்ச்சியை இது தூண்டும்.

உங்கள் விளையாட்டுகளை மூளை சார்ந்த விளையாட்டுகளோடு நீங்கள் விளையாடும் போது உங்களுக்கு மூளை சுறுசுறுப்பாகும். உதாரணமாக செஸ் விளையாட்டு, புதிர்கள் ,ஆப்டிகல் எல்லோசன் போன்ற மெமரி விளையாட்டுகளை கூறலாம். இது உங்கள் மூளைக்கு சவால் விடும் செயல்களில் உங்களை ஈடுபடுத்தும்.

Brain
Brain

மேலும் மூளையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஆரோக்கியமான உணவுகளை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்க கூடிய ஊட்டச்சத்து நிறைந்த உணவை நீங்கள் உட்கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

உங்கள் நினைவு திறனை ஒருங்கிணைக்க ஒட்டுமொத்த மூளையின் செயல்பாட்டிற்கு உறக்கம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். எனவே போதுமான அளவு நீங்கள் தூங்கும் போது உங்களது மூளை சுறுசுறுப்படையும்.

சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுவது, வளமான உறவுகளை பராமரிப்பது அறிவாற்றல் செயலை மேம்படுத்தும். எனவே சமூக தொடர்பில் நீங்கள் இருப்பது மிகவும் சிறப்பானதாக இருக்கும்.

Brain
Brain

உங்கள் மூளையை சுறுசுறுப்பாக மாற்றி அமைக்க புதிய மொழிகளை கற்கலாம். அதுபோல நினைவாற்றலை அதிகரிக்க தியானத்தை மேற்கொள்ளுங்கள். மன அழுத்தத்தை குறைத்தால் உங்கள் மூளை சுறுசுறுப்பாக மாறிவிடும்.

எதிலும் ஆர்வமாக இருக்க முயற்சி செய்யுங்கள். கேள்விகள் கேட்பதின் மூலமும், புதிய அவற்றைப் பற்றி ஆய்வு செய்வதின் மூலமும், புதிய தேடலில் இறங்குவதின் மூலமும் உங்கள் மனநிலை வளர்வதோடு மூளையின் செயல்திறனும் அதிகரிக்கும்.

நீர் இழப்பு ஏற்படுவதால் மூளையின் அறிவாற்றல்  பாதிக்கலாம். எனவே எப்போதும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை உறுதியாக கடைப்பிடிக்கவும்.

மேற்கூறிய டிப்ஸ்களை நீங்கள் ஃபாலோ செய்வதின் மூலம் உங்களது மூளை சுறுசுறுப்பாகி உங்களை சிறப்பாக செயல்பட உதவி செய்யும்.