நிம்மதியான ஆழ்ந்த தூங்க வேண்டுமா? – இத ஃபாலோ பண்ணுனா.. தூக்கம் ஈஸியா வரும்..
உலகில் வாழக்கூடிய ஒவ்வொரு ஜீவ ராசிக்கும் உறக்கம் என்பது இன்றியமையாத நிலை என்று கூறலாம். எனினும் சிலர் அவர்களின் மன அழுத்தம், வேலைப்பளு போன்றவற்றின் காரணத்தால் நிம்மதியான ஆழ்ந்த தூக்கம் இல்லாமல் என்ன செய்வது என்று தெரியாமல் இன்றைய காலகட்டத்தில் இருக்கிறார்கள்.
அவர்கள் இரவு நேரங்களில் நிம்மதியான ஆழ்ந்த உறக்கத்தை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய சில குறிப்புகளை இந்த கட்டுரையில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாகவே உறங்க கூடிய நிலையை பல நிலைகளாக நாம் பிரிக்கலாம். அதில் நீங்கள் உறங்கும்போது குப்புறப்படுத்து உறங்குவது, பக்கவாட்டில் சாய்ந்து உறங்குவது, நேராக உறங்குவது போன்றவை இதில் அடங்கும். ஆனால் இதில் சரியான முறையில் நீங்கள் உறங்கும் போது தான் நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தை பெற முடியும்.
பக்கவாட்டில் உறங்குவதின் மூலம் உங்களுக்கு ஆழ்ந்த உறக்கம் ஏற்படும் என்று ஒரு ஆய்வு விளக்குகிறது. பக்கபாட்டில் உறங்க கூடிய மனிதர்கள் சுமார் 54 சதவீதம் பேர் நிம்மதியான உறக்கத்தை சரியான இந்த நிலையில் மூலம் பெறுகிறார்கள்.
பக்கவாட்டில் நீங்கள் உறங்கினாலும் தொடர்ந்து, பக்கவாட்டின் நிலையிலேயே உறங்காமல் உங்கள் நிலையை மாற்றி, மாற்றி உறங்குவதின் மூலம் முதுகுத் தண்டுவட பிரச்சனைகள் ஏதும் ஏற்படாமல் நிம்மதியாக உறங்கலாம்.
மேலும் பக்கபாட்டில் உறங்குவதின் மூலம் உங்களது தோள்பட்டை, கழுத்து, முதுகு போன்ற இடங்களில் ஏற்படக்கூடிய வலிகளுக்கு நிவாரணம் கிடைப்பதோடு, குறட்டை விடும் பழக்கம் குறைய கூடிய வாய்ப்புகளை இந்த பக்கபாட்டு உறக்கம் மேம்படுத்திக் கொடுக்கும்.
ஆழ்ந்த உறக்கம் ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றி அமையாது. இதன் மூலம் உடலுக்கு நன்மை ஏற்படும். எனவே நீண்ட நேரம் உடல் சலிப்பு நீங்க உறங்குவது மிகவும் அவசியமான ஒன்று என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் நன்றாக தூங்குவதின் மூலம் தான் கால், முதுகு வலி போன்ற வலிகளில் உங்களுக்கு நிவாரணம் கிடைக்கிறது. உறங்கும் போது குப்புறப்படுத்து உறங்குவதை நீங்கள் தவிர்த்து விடுங்கள். அப்படி உறங்கும் போது உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்படுவதற்கான சூழ்நிலை ஏற்படும்.
மேலும் நீங்கள் உறங்கச் செல்லும் போது ஒரு நிமிடம் அல்லது குறைந்தபட்சம் ஐந்து நிமிடங்கள் ஆவது தியானம் செய்துவிட்டு உறங்கச் செல்லுங்கள். உறங்குவதற்கு முன்பு உடற்பயிற்சிகளை குறைந்தபட்சம் 2 மணி நேரத்துக்கு முன்பாக மேற்கொள்ளுங்கள்.
அது போல இரவு உணவை ஏழு மணி முதல் 8 மணிக்குள் உண்டு விட்டு, ஒரு மணி நேரம் கழித்து உறங்கச் செய்வது மிகவும் நல்லது. உறங்குவதற்கு முன்பு குறைந்தபட்சம் 2 மணி நேரங்களாவது நீங்கள் கணினி, அலைபேசி போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள்.
இதன் மூலம் கண்டிப்பாக உங்களுக்கு ஆழ்ந்த உறக்கம் ஏற்பட்டு காலை நேரம் எழும் போது உடல் புத்துணர்வோடு இருப்பதற்கு வழி செய்யும்.