“வரலாற்று நாயகி செம்பியன் மாதேவி..!” – யார் இந்த செம்பியன் மாதேவி வரலாறு என்ன சொல்கிறது..
சோழர் குல பெண்ணான செம்பியன் மாதேவி சோழ மன்னர் கண்டராதித்தரின் பட்டத்து ராணியாக திகழ்ந்திருக்கிறார். மேலும் இவர் சித்திரை மாதம் கேட்டை நட்சத்திரத்தில் மழவர் குடும்பத்தில் பிறந்தவர்.
பராந்தக சோழர் இவருடைய தந்தை மிகச் சிறந்த சிவபக்தராக விளங்கி இருக்கிறார். இவரது கணவரான கண்டராதித்தர் இறப்புக்குப் பிறகு இவருடைய பிள்ளைக்கு அரியணையில் உரிமை இருந்த போதும், தனது மகன் மிக சிறிய சிறுவனாக இருந்த காரணத்தினால் தாயார் ஆகிய இவர் அவருக்கு வழி காட்டியாக இருந்து ஆட்சி நடத்தினார்.
கண்டராதித்தரின் சகோதரர் அருஞ்சய சோழனை நாடாளும்படி கேட்டுக்கொண்ட இவர் சோழ நாட்டின் ராஜமாதாவாக விளங்கி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் தீவிர சிவபக்தியை கடைப்பிடித்து வந்த ராஜமாதா, சோழ நாட்டில் இருக்கும் சிவாலயங்களை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்ட விஷயம் பலருக்கும் தெரியாது.
தன் கணவரைப் போலவே சைவப் பணிகளை தழைத்து தொங்க செய்ய அருஞ்சய சோழனும், ராஜ மாதாவிற்கு பொருட்களை அள்ளி வழங்கினார். இதனை அடுத்து தான் பல கோயில்கள் சோழ நாட்டில் சீரும் சிறப்புமாக பராமரிக்கப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் 7 மற்றும் 8 நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட பல சிதலம் அடைந்த கோயில்களை சீரமைத்த பெருமை செம்பியன் மாதேவியைத்தான் சாரும். அந்த வரிசையில் செம்பியன் மாதேவி முதல் முதலில் சீரமைத்த திருக்கோயில் நல்லம் கோயில் ஆகும்.
இந்தக் கோயிலை சீரமைக்க கருங்கல் பணியை செய்ய பல ஆயிரம் மைல்களில் இருந்து மிகப்பெரிய எடை கொண்ட கருங்கற்களை வரவழைத்து தச்சர்கள் இடை விடாமல் பணிபுரிந்து இந்தக் கோயிலின் திருப்பணிகளை செய்தார்கள். தினம் தோறும் திருப்பணிகள் சரியான வழியில் நடக்கிறதா என்பதை ராஜமாதேவி அனுதினமும் சென்று கவனித்துக் கொண்டிருப்பதாக செய்திகள் உள்ளது.
மேலும் நல்லம் கோயில் பணி முடியக்கூடிய வேலையில் கருவறைக்கு வெளியில் கண்டராதித்தர் சிவ பூஜை செய்வது போல ஒரு சிலை செதுக்கப்பட்ட போது, அந்த சிலையை பார்த்து கண்ணீர் விட்டதோடு தன் கணவரை நேரில் பார்த்த ஆனந்தத்தை செம்பியன் மாதேவி அடைந்தார்.
இதனை அடுத்து மேலும் பத்து கோவில்களில் தனது கணவர் சிவ பூஜை செய்யக்கூடிய காட்சியை சித்தரிக்க கூடிய சிற்பங்களை செய்ய கட்டளையிட்டார்.
சோழர் குலத்தில் அருஞ்சய சோழனின் மகன்களுக்கும், மகள் குந்தவை நல்ல குணங்களோடு வளருவதற்கு செம்பியன் மாதேவியே காரணம் என்று கூறலாம். இதனை அடுத்துத்தான் செம்பியன் மாதேவியிடம் இளம் பருவம் முதலில் வளர்ந்த ராஜராஜன் அரியணை ஏறியதும், தரணி போற்றக்கூடிய தஞ்சை பெரிய கோயிலை கட்டினார் என்று கூறலாம்.
நீதி, நேர்மை, தர்மத்தை அரச குடும்பத்திற்கு கற்றுக் கொடுத்த செம்பியன் மாதேவி சிவபக்தியில் சிறப்பாக ஈடுபட்டவர். மேலும் அரச குடும்பத்தாரை சைவ பற்று மிக்கவராக மாற்றிய பெருமையும் இவரை சேரும்.இவர் தனது 85 ஆவது வயதில் இவர் இறைவனடி சேர்ந்தார்.
இப்போது உங்களுக்கு மிக நன்றாக புரிந்து இருக்கும் செம்பியன் மாதேவி எத்தகைய திருப்பணிகளை ஆற்றி சிறப்பாக செயல்பட்டு, பெண்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருந்திருக்கிறார் என்று.