• November 21, 2024

தென்னை நகரம்.. பொள்ளாச்சி பற்றி அறிந்திடாத வரலாறு..

 தென்னை நகரம்.. பொள்ளாச்சி பற்றி அறிந்திடாத வரலாறு..

Pollachi

மேற்குத் தொடர்ச்சி மலைக்கு மிக அருகில் இருக்கும் சொர்க்க நகரம் தான் பொள்ளாச்சி. வருடந்தோறும் வானிலை சொல்லவே வேண்டாம். மிகவும்  ரம்மியமாக இருப்பதோடு, மனம் விட்டு ரசிக்கும்படி இயற்கை அழகுடன் இருக்கும் ஊர் தான் பொள்ளாச்சி.

பொழில்வாய்ச்சி என்று அழைக்கப்பட்ட ஊர் காலப்போக்கில் மாறி மருவி பொள்ளாச்சி என்று இப்போது அன்போடு அழைக்கிறார்கள். 

பொருள் ஆட்சி செய்யும் இந்த பொள்ளாச்சி சோழர் காலத்தில் முடிகொண்ட சோழநல்லூர்  அழைக்கப்பட்ட வளமான ஊராக இருந்தது.

Pollachi
Pollachi

சினிமாத்துறையை சேர்ந்தவர்கள்  விரும்பும் ஒரு இடம் உண்டு என்றால் அது நம்ம பொள்ளாச்சி தான். கடந்த சில வருடங்களில் மட்டும் சுமார் 1500 திரைப்படங்களை எடுத்துயிருக்கிறார்கள்.

தமிழ்த் திரையுலகின் பிரபல திரைப்படப் படப்பிடிப்பு தளமாக பொள்ளாச்சி விளங்குகிறது. அதுமட்டுமா? பொள்ளாச்சி வெல்லச் சந்தை தான் ஆசியாவிலேயே மிகப் பெரிய வெல்லச் சந்தை.

அதே போல தான் தென்தமிழகத்திலேயே மிகவும் பெரிய மாட்டுச் சந்தை நம் பொள்ளாச்சியில் தான் உள்ளது. இதன் பரப்பளவு சுமார் ஒரு ஏக்கர். இந்தச் சந்தையில் இருந்து தான் கேரளா மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளுக்கு மாடுகளை கொண்டு சொல்கிறார்கள்.

பொள்ளச்சியின்  மற்றொரு சிறப்பு அங்கு உற்பத்தி செய்யும் பொருள் கருப்பட்டி. இந்த பகுதியில் பெரும்பாலான இடங்களில் தென்னை மரங்கள் தான் அதிக அளவு உள்ளது. 

Pollachi
Pollachi

பொள்ளாச்சி இளநீர் மற்ற பகுதிகளில் விளையும் இளநீரை விட கூடுதல் இனிப்பு சுவையானது.இதற்கு காரணம் இங்கு உள்ள மண்,சீதோஷ்ண நிலை மற்றும் தண்ணீர் தான்.அதனால் தான் நம் தல அஜித் பொள்ளாச்சி இளநீரேனு படத்தில் பாடியிருக்கிறார்.

பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இருந்து வெளிமாநிலங்களுக்கு தினமும் ஒரு லட்சம் இளநீர், லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது.

சிக்காட்ட  கலை பொள்ளாச்சி பகுதியில் மட்டுமே காணப்படும் தனிச்சிறப்பான கலை.இக்கலையை தமிழகத்தில் மட்டும் அல்ல இந்தியா ஏன் உலகில் வேறு எந்த ஒரு பகுதி யிலும் காணமுடியாத அற்புதமான கலையாகும்.

சித்தர்கள் வரிசையில் அழுக்கு சாமியார் என்பவர் வேட்டைக்காரன்புதூரில் வாழ்ந்தாக வரலாறு உள்ளது.  கண்ட நித்திரை இவருடைய சிறப்பு.இவர் உறங்கும் போது உடலில் உள்ள உறுப்புகள் தனித்தனியாக பிரிந்து உறங்குமாம்.இவருடைய ஜீவ சமாதியை  கோவிலாக்கி பக்தர்கள் வணங்கி வருகிறார்கள். ஓவ்வொரு கார்த்திகை மாசமும் மிருகசீரிசம் நட்சத்திரத்தில் குரு பூஜை நடக்கும்.

Pollachi
Pollachi

இன்நொரு சித்தர் புரவிபாளையத்தில் சித்தர் கோடி தாத்தா.இவரை 1980 ல் புரவிபாளையத்திற்கு வந்து இசை ஞானி இளையராஜா சந்தித்து வணங்கி னார் பின்னர் சித்தர் கோடி தாத்தாவின் தீவிர பக்தரானார்.

தொழில் என்று பார்தால் பொள்­ளாச்­சி­யில் தென்னை நார் மற்­றும் நார் சார்ந்த, 750க்கும் மேற்­பட்ட நிறு­வ­னங்­கள் உள்ளது. இங்கு தயா­ரிக்­கப்­படும் கயிறு, தென்னை நார், நார் துகள் கட்­டி­கள் வெளி­நா­டு­க­ளுக்கு ஏற்­று­மதி செய்யப்படுகிறது.

கி.பி.8 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சுப்ரமண்யர் திருக்கோயில், மிகப் பிரபலமான ஒரு சுற்றுலாத் தலமாகும். பொள்ளாச்சி மற்றும் அதன் அருகில் உள்ள அணைகள் நீரார் அணை, ஆழியார் அணை, மீன்கார அணை, சோழியார் அணை,  பெருவரிப்பள்ளம் அணை ஆகிய பிரபலமான அணைக்கட்டுகள் உள்ளது.

Pollachi
Pollachi

கோவில்கள் வரிசையில் ராமலிங்க சௌடேஷ்வரி அம்மன் கோயில், சுப்ரமண்யஸ்வாமி கோயில், மாசாணி அம்மன் திருக்கோயில், அழகுநாச்சி அம்மன் கோயில்,  சூலக்கல் மாரியம்மன் திருக்கோயில், ஸ்ரீ வேலாயுதஸ்வாமி திருக்கோயில், அம்பரம்பாளையம் தர்க்கா மற்றும் அருள்மிகு பிரசாந்த விநாயகர் கோயில், போன்ற பல கோயில்கள் நிறைந்த ஊர்.

ஆழியார் சித்தாஷ்ரமம், ஆனைமலை வனவிலங்கு சரணாலையம், டாப் ஸ்லிப், குரங்கு நீர்வீழ்ச்சி இது எல்லாம் நீங்கள் பார்க்க வேண்டிய  சுற்றுலா தளங்கள் ஆகும்.