“முப்பெரும் மன்னர்களால் ஆளப்பட்ட மயிலாடுதுறை..!” – வரலாறு உண்மைகள்..
இன்றைய மயிலாடுதுறை அன்று மாயவரம் என்று அழைக்கப்பட்டது இந்த மாவட்டமானது மிகவும் வளமான கலாச்சாரத்தோடு திகழ்ந்த ஊர் இங்கு அழகிய கோயில்கள் அதிக அளவு காணப்படுகிறது.
மயில் ஆடுதுறை என்று பெயர் வர காரணம் எந்த நகரில் மயில்கள் அதிக அளவு இருந்ததால் மயில்கள் ஆடும் துறை என்று கூறப்பட்டது பின்னாளில் மயிலாடுதுறை என்று மருவியது.
இந்த ஊரை ஒரு காலத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆண்டு வந்திருக்கிறார்கள். வணிகத்திற்கு முக்கியமான மையமாக மயிலாடுதுறை எனும் மாயவரம் திகழ்ந்துள்ளது. பதினாறாம் நூற்றாண்டில் எந்த மாவட்டமானது விஜயநகர பேரரசின் ஆட்சியில் இருந்தது.
இந்த சமயத்தில் விஜயநகர மன்னர்களின் பெயர் சொல்லக்கூடிய கலை மற்றும் கலாச்சாரம் சிறப்பான முறையில் பிரதிபலிக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சியின் போது மெட்ராஸ் பிரசிடென்சி ஒரு பகுதியாக இருந்த மயிலாடுதுறை சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தை பிடித்தது.
இதனை அடுத்து 2020 ஆம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து இந்த மாவட்டம் உருவாக்கப்பட்டது. இந்த மாவட்டத்தில் சுமார் 1605 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உள்ளது. மேலும் 1.2 பில்லியன் மக்கள் வாழ்கிறார்கள்.
மயிலாடுதுறை குத்தாலம், சீர்காழி, தரங்கம்பாடி, கும்பகோணம், பாபநாசம் என மயிலாடுதுறை மாவட்டம் ஆறு தாலுகாவாக பிரிக்கப்பட்டுள்ளது. இதுவரை அரசு குறிப்புகளில் மாயவரம் என்று அழைக்கப்பட்ட இந்த ஊர் மயிலாடுதுறை என எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் அதிரடிப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
தமிழக மக்களின் சீரிய மரபினை வெளிப்படுத்தக்கூடிய கலாச்சாரத்தோடு தொடர்புடைய இந்த மயிலாடுதுறை மக்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் கலை பாரம்பரியம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கட்டிட கலைக்கு பெயர் பெற்ற இந்த மாவட்டத்தில் இருக்கும் கோயில்களில் காணப்படக்கூடிய சிற்பங்கள் பலரையும் கவரும் வண்ணம் உள்ளது.
இந்துக்களின் முக்கிய வழிபாட்டு மையங்கள் இந்த பகுதியில் அமைந்துள்ளது. இங்கு இருக்கக்கூடிய மயூரநாதர் சுவாமி கோயில், பூம்புகார், தட்சிணாமூர்த்தி கோயில், அனந்தமங்கலம், திருமுல்லை வாசல், சட்டநாதசுவாமி கோயில், தரங்கம்பாடி, கீழ் பெரும் பள்ளம், நாகநாதர் கோவில் போன்றவை குறிப்பிடத்தக்க ஸ்தலங்கள் ஆகும்.
இங்கு கொண்டாடப்படும் கடை முழுக்கு திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்த திருவிழாவாக கருதப்படுகிறது ஐப்பசி மாசம் முழுவதும் மயூர நாகசுவாமி ஆலயத்தில் நடைபெறக்கூடிய கடை முக தீர்த்தவாரி மிகவும் முக்கியமான திருவிழாவாகும். ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுவதைத்தான் கடை முழுக்கு என்று அழைக்கிறார்கள். இது பற்றி துலா புராணம் விரிவான செய்திகளை கூறுகிறது.