“ராவணனின் தம்பி கும்பகர்ணன் ஏன் ஆறு மாதம் உறங்குகிறான்..!” – விவகாரமான விஷயங்கள்..
இந்தியாவில் மிகச்சிறந்த இதிகாசமாக கருதப்படும் ராமாயணம் பற்றிய கதைகள் உங்களுக்கு மிக நன்றாக தெரியும். இந்த ராமாயணத்தில் கும்பகர்ணன் என்ற ஒரு கதாபாத்திரம் வரும்.
இந்த கும்பகர்ணன் அசுரன் ராவணனின் தம்பி என்பதும் அவனிடம் காணப்படக்கூடிய சில விவகாரமான குணாதிசயங்களைப் பற்றி விரிவாக எந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
கும்பகர்ணனை பொறுத்தவரை வருடத்தில் ஆறு மாதங்கள் உறங்கியும், ஆறு மாதங்கள் தொடர்ந்து உணவை சாப்பிட்டு நேரத்தை கழிக்க கூடியவர் என்பது நமக்கு மிகவும் நன்றாக தெரியும். அப்படி அவர் செய்ய காரணம் என்ன எதனால் இந்த நிலை ஏற்பட்டது என்பதை தெரிந்து கொள்ளலாமா..
முழித்து இருக்கக்கூடிய காலகட்டத்தில் கும்பகர்ணன் பெரும்பாலும் முனிவர்களையும் சாதுக்களையும் அதிக அளவு சாப்பிட்ட போதும் அவரது பசி மட்டும் அடங்கியதே இல்லை என கூறலாம்.
அப்படிப்பட்ட இந்த கும்பகர்ணனின் மீது தேவர்களின் தலைவனான இந்திரனுக்கு கடுமையான பொறாமை ஏற்பட்டது. இதற்கு காரணம் கும்பகர்ணனின் புத்திசாலித்தனமும், வீரமும் அவனை ஈகோ கடலில் தள்ளியது.
எனவே கும்பகர்ணனை எப்படி வென்று விட வேண்டும் என்று தக்க நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்தான் இந்திரன். இதனை அடுத்து ராவணன், கும்பகர்ணன், விபீஷணன் பிரம்ம தேவரின் அருளை பெறுவதற்காக யாகம் செய்ய புறப்பட்டார்கள்.
இவர்களின் தியானத்தில் மனம் மகிழ்ந்த பிரம்மன் கும்பகர்ணனை பார்த்து என்ன வரம் வேண்டும் என்று கேட்டார் கும்பகர்ணன் இந்திராசனா என்பதை வரமாக வேண்ட வேண்டும் என்று நினைத்திருந்தால் ஆனால் அதற்கு பதிலாக நித்ரசனா என்ற வரத்தை கேட்டுவிட்டார்.
தவறுதலாக இந்திரசனாவிற்கு பதிலாக நித்ராசனாவை கேட்டதை உணர்ந்த கும்பகர்ணன் தன் தவறை நினைத்து வருந்திய போதும் கேட்ட வரத்தை பிரம்மதேவன் தந்தேன் என்று சொல்லிவிட்டார். பிரம்மன் தந்த வரத்தை திரும்ப பெற முடியாத நிலை ஏற்பட்டது. இப்படி வார்த்தை தவறி கேட்டதற்கு காரணம் இந்திரனின் குறுக்கு புத்தி என்று கூறலாம்.
மேலும் வரம் கேட்கும் போது அவன் நாவு தடுமாற வேண்டும் என சரஸ்வதி தேவியிடம் முறையிட்டதை அடுத்து, வரத்தை மாற்றிக் கேட்கக் கூடிய நிலை ஏற்பட்டது. இதனை அடுத்து தான் ஆறு மாதங்கள் உறங்கவும், ஆறு மாதங்கள் விழித்திருக்கக் கூடிய நிலையும் கும்பகர்ணனுக்கு ஏற்பட்டது.
இப்போது உங்களுக்கு மிக நன்றாக புரிந்து இருக்கும். கும்பகர்ணன் ஏன் ஆறு மாத காலம் உறங்கி ஆறு மாத காலம் விழித்திருக்கிறார் என்று இது போன்ற கருத்துக்கள் உங்களுக்கு தெரிந்திருந்தால் எங்களோடு பகிர்ந்து கொள்ளலாமே.