பீட்ரூட் பற்றிய வியத்தகு செய்திகள்..! – விவரமாக பார்க்கலாமா..
பீட்ரூட் ஆனது தெற்கு ஐரோப்பாவில் தன்னிச்சையாக வளர்ந்து, பின்னர் எகிப்தில் கீரையாக வீடுகளில் வளர்க்கப்பட்டது. பின்னர் ரோமானியர்களால் பயிர் செய்யப்பட்டது. முதலில் இதன் இலைகளை மட்டும் சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்த மக்கள் 16 ஆம் நூற்றாண்டில் தான் கிழங்கை சாப்பிட ஆரம்பித்தனர்.
பீட்ரூட் செனோபாடிசியஸ் என்ற தாவர குடும்பத்தைச் சார்ந்தது. இதன் அறிவியல் பெயர் பீட்டா வல்கர்ரிஸ். தமிழில் இதனை செங்கிழங்கு, அக்காரக்கிழங்கு என்று கூறுகிறோம்.
வகைகள்:
1.சர்க்கரை பீட் – சர்க்கரை தயாரிப்பதில் பயன்படுத்துவது.
2.சர்க்கரை சிவப்பு பீட் – நாம் சமையலில் பயன்படுத்துவது.
3.மான்ஜல் வர்செல் – கால்நடைக்கு உணவாக பயன்படுகிறது.
4.இலை பீட் என நான்கு வகைகள் உள்ளது.
பீட்ரூட்டில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:
விட்டமின் ஏ, இ, சி.
பி1 தயாமின்.
பி2 ரிபோஃப்ளோவின்.
பி3 நியாசின்.
பி5 பான்டோதெனிக் அமிலம்.
பி6 பைரிடாக்ஸின். ஃபோலேட்டுகள்
தாதுஉப்புக்கள்:
காப்பர், இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம்,துத்தநாகம், கால்சியம், சோடியம்.
மேலும் பைட்டோநியூட்ரியன்களான பீட்டா கரோடீன்கள், பீட்டைன், லுடீன் ஸீஸாத்தைன் போன்றவை காணப்படுகிறது.
மருத்துவ குணங்கள்:
பீட்ரூட்டை உண்ணுவதால் இதில் உள்ள நைட்ரேட்டுகள் உடல் சோர்வு, மன அழுத்தத்தை குறைந்து உடலுக்கு புத்துணர்ச்சி ஏற்படும்.
பீட்ரூட் சாற்றை வாரம் இரு முறை பருகுவதால் இரத்தத்தில் அதிகளவு சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.
இதில் உள்ள ஒரு வகை நார்ச்சத்து நீரிழிவு நோயான ஹைப்பர் கிளைசீமியாவைக் நகட்டுப்படுத்துவதாக ஐஸ்லாந்தில் மேற்கொண்ட ஆய்வு கூறுகிறது.
பீட்ரூட் ஜூஸ் மார்பக புற்றுநோய்களைத் தடுக்கும் இதில் உள்ள பெட்டானின் நுரையீரல் மற்றும் தோல் புற்றுநோய்களை தடுக்கும் திறன் உள்ளது.
கீரையை விட இரும்புச்சத்து இதில் உள்ளதால் இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் ரத்தசோகை தடுக்கும் ஆற்றல் இதில் உள்ள ஃபோலேட்டுக்கு இருக்கிறது.
பீட்ரூட் சாறில் கால்சியம் உள்ளதால் எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்தவும் உதவும்.
அதிக கலோரிகளை குறைக்க நினைப்பவர்கள் பூஜ்ஜிய கொலஸ்ட்ரால் கொண்ட பீட்ரூட் சாற்றை அருந்துவது மூலம் கொழுப்பை குறைக்கலாம்.
பீட்ரூட் சாறில் ஃபோலிக் அமிலம் உள்ளதால் கர்ப்பிணிப் பெண்களுக்கு உகந்தது.
2 Comments
அழகு த்தமிழ் அழகாய் விளக்கம் கொடுத்த ஆசிரியருக்கு நன்றி.
அழகு தமிழில் அழகான விளக்கம் கொடுத்த ஆசிரியருக்கு நன்றி ❤️
Comments are closed.