“தொழில்நுட்பம் வளராத காலம்..!” – வானவியலில் சொல்லி அடித்த ஆரியப்பட்டர்..!
இந்தியாவில் மகத பேரரசு ஆட்சி செய்த காலத்தில் அதன் தலைநகராகிய பாடலிபுத்திரத்தில் பிறந்தவர் தான் ஆரியப்பட்டர்.
குசும்புரத்தில் குருகுல கல்வி முறையில் கல்வி கற்ற ஆரியப்பட்டர், உயர்கல்விக்காக நாளந்தா பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற, இவர் கணிதம் மற்றும் வானவியல் ஆய்வுகளில் அதிக அளவு ஈடுபட்டவர்.
மிகப்பெரிய அளவு அறிவியல் தொழில்நுட்பங்கள் வளராத காலத்திலேயே, இவர் தாரேகணா என்ற இடத்தில் இருந்த சூரியனார் கோயில் அருகே இவர் நிறுவியிருந்த வானவியல் ஆய்வகம் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்த உதவிகரமாக இருந்தது.
இவரது அபார திறமையை மதித்து நாளந்தா பல்கலைக்கழகத்தின் தலைமை குருவாக ஆரியபட்டரை, மன்னர் புத்த குப்தர் நியமித்தார். இவர் எழுதிய “ஆரியப்பட்டீயம்” என்ற சமஸ்கிருத நூல் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.
இந்த நூல் முழுவதும் செய்யுள் வடிவில் உள்ளதோடு சூத்திரங்களாகவும் உள்ளது. மொத்தம் 121 செயல்களைக் கொண்டிருக்கக் கூடிய இது நான்கு பிரிவுகளாக பகுக்கப்பட்டுள்ளது.
இந்த உலகமானது தோன்றிய மகா யுகத்தின் துவக்கம் 43.2 லட்சம் ஆண்டுகள் என்று ஆரிய பட்டர் கூறி இருப்பது நவீன விஞ்ஞான கணக்கோடு ஒத்துப் போவது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
மேலும் இவர் உருவாக்கிய காலப்பகுப்பு அட்டவணைகளை பின்னாளில் நாள்காட்டியாக உருவெடுத்தது என கூறலாம். ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகள் அனைத்துமே ஆரிய பட்டரின் நாட்காட்டியை அடிப்படையாகக் கொண்டது தான்.
இவர் கண்டுபிடித்த கணித பாதமே பின்னாலில் அல்ஜிப்ராவாக உருவெடுத்தது. அது மட்டுமல்லாமல் கணித பாதமே நவீன திரிகோணவியலுக்கான ஆதாரமாக உள்ளது.
இவரின் மூலம் உருவான காலக்கியபாதமும், கோள பாதமும் தற்கால வானியலுக்கு ஆணிவேராக உள்ளது. பூமி கோள வடிவம் ஆனது. பூமியின் விட்டம் 1050 யோஜனை, பூமியின் சுற்றளவு 44860 கிலோமீட்டர், பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்கிறது.
மேலும் அவ்வாறு சுற்ற 23 மணி 56 நிமிடம் 4.1 வினாடி ஆகிறது என்பதை அவர் நாழிகையில் குறிப்பிட்டு இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் வானத்தில் இருக்கக்கூடிய அனைத்து கோள்களும், கோள வடிவம் ஆனவை. சூரியனும், சந்திரனும் கோள வடிவில் உள்ளது. சூரியனின் ஒளியைத்தான் சந்திரனும் மற்ற கோள்களும் பிரதிபலிக்கின்றதே என்பது போன்ற உண்மைகளை அன்றே கணித்தவர்.
மேலும் சூரியனைச் சுற்றி வரும் கோள்கள் சாய்வான பாதையில் சுற்றுவதை கண்டுபிடித்த அவர் பூமி தட்டையானது என்று நம்பிய கிரேக்க அறிஞர்களுக்கு சவால் விடும்படி அதன் உண்மையான வடிவத்தையும், அதன் கோள்களையும் துல்லியமாக கணித்தவர்.
மேலும் சந்திர கிரகணம் பூமியின் நிழலாலும், சூரிய கிரகணம் சந்திரனாலும் ஏற்படுகிறது என்பதை தெளிவாக விளக்கியவர். சைன் அட்டவணையை முதல் முதலில் உருவாக்கியவர் இவர்தான்.
ஆரியபட்டர் ஒரு மகத்தான சாதனையாளராக இருந்ததோடு மட்டுமல்லாமல் 1500 ஆண்டுகளுக்கு முன்பே தனது நுண் அறிவை பயன்படுத்தி வானவியலில் மட்டுமல்லாமல் கணிதத்திலும் பலவிதமான சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார் என்பது இதன் மூலம் உங்களுக்குப் புரிந்திருக்கும்.