இந்து மதத்திற்கும் கிரேக்க புராணத்திற்கும் தொடர்பு இருக்கிறதா? – வியக்க வைக்கும் உண்மைகள்..
உலகிலேயே மிகப் பழமையான மதங்களில் ஒன்றாக இந்து மதம் கருதப்படுகிறது. பல்வேறு காலகட்டங்களில் இந்து மதம் அழிந்து போல இருக்கலாம். எனினும் என்றுமே அழியாத ஒரு அற்புதமான மதமாக இது விளங்குகிறது.
இந்து மதம் எதையும் வற்புறுத்தி யார் மீதும் திணிக்கப்படாமல் உள்ளது. இந்த மதத்திற்கும், கிரேக்க நாட்டில் உள்ள புராணங்களுக்கு இடையே சில ஒற்றுமைகள் இருப்பதை பார்க்கும்போது ஆச்சரியங்கள் ஏற்படுகிறது.
இது எப்படி நிகழ்ந்திருக்கும் என்பதை யோசித்துப் பார்த்தால் கற்பனைக்கு கூட எட்டாத வகையில் தான் உள்ளது என்று கூறலாம். இங்கு இந்து மதத்தில் ராமாயணத்தில் சித்தரிக்கப்பட்ட ஜடாயு, கிரேக்க புராணங்களில் இருக்கும் இக்காரஸ் பறக்கக்கூடிய திறனை படைத்த படைப்புக்களாக உள்ளது.
அது போலவே மகாபாரதத்தில் வரும் பீமனுக்கு நிகரான தீசஸ் என்ற கதாபாத்திரமானது கிரேக்க புராணங்களில் கூறப்பட்டுள்ளது. மேலும் கிரீட் ஏதென்ஸில் போரிடுவதை தடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் ஒவ்வொரு ஒன்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏதென்ஸில் இருந்து ஏழு இளைஞர்கள் மற்றும் ஏழு இளம் பெண்கள் கீரீட்டிக்கு அனுப்பப்படுவார்கள்.
இவர்களை அங்கு இருக்கக்கூடிய அசுரன் உணவாக சென்று விடுவதாகவும், இந்த அசுரனை அரியட்னின் துணையுடன் தீசஸ் கொன்று விடுவதாக கூறியிருக்கிறார்கள்.
இந்த கதையானது இன்று புராணத்தில் பகாசுரன் என்ற அசுரனை அழிப்பதற்காக பீமன் அவனுக்கு உரிய உணவை வண்டிகளில் சுமந்து சென்று அந்த அசுரனை கொன்ற கதையை ஒத்துள்ளது அல்லவா, இதைப்போலவே மேலும் ஆச்சரியப்படக்கூடிய விஷயம் இன்னொன்றும் உள்ளது.
இந்து புராணங்களில் கூறப்பட்டிருக்கும் காமதேனு பசுவை போல கிரேக்க புராணங்களிலும் சொல்லப்பட்டிருக்கக் கூடிய பல கொம்பு உடைய கார்னூகோபியா . இந்த கிரேக்க பசுவிற்கு பெண்ணின் தலை உள்ளது. மேலும் இதன் பயன்பாடும், நமது காமதேனுவை போல் தான் சித்தரிக்கப்பட்டுள்ளது. வேண்டியதை வினை நாழியில் தரக்கூடிய இந்த கார்னூகோபியா, கிரேக்கத்தின் காமதேனு என்று கூறலாம்.
இந்து சமூகத்தில் எப்படி இறந்த குழந்தைகளை கடவுள்களாக நினைத்து வழிபடுகிறார்களோ, அதுபோலவே கிரேக்க சமுதாயத்திலும் குழந்தைகளை தெய்வமாக பார்க்கிறார்கள். மேலும் கிரேக்க கடவுளாக சித்தரிக்கப்பட்டு இருக்கக்கூடிய ஹெராக்கிள்ஸ் நமது கண்ணனைப் போலவே சர்ப்பங்களோடு சண்டையிட்டு இருக்கிறார்.
ஸ்ரீ கிருஷ்ணர் எப்படி காளிங்கன் என்ற பாம்பின் மீது ஏறி நடனம் ஆடினாரோ, அதுபோலவே சர்ப்ப ஹைட்ரா என்ற பாம்போடு கிரேக்க கடவுள் சண்டையிட்டு இருக்கிறார். எனினும் இந்த பாம்பினை அவர் கொல்லவில்லை ஒரு மிகப்பெரிய கல்லை மட்டும் எடுத்து அந்த பாம்பின் தலையில் வைத்திருக்கிறார்.
இதனை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது இந்து சமயத்தில் கூறப்பட்டிருக்கக்கூடிய புராணங்களுக்கும் கிரேக்கத்தில் இருக்கும் கடவுள் மற்றும் புராணங்களுக்கும் இடையே உள்ள நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.
எனினும் இந்த ஒற்றுமைக்கு என்ன காரணம் என்பதை இதுவரை புரியாத புதிராகவே உள்ளது.
1 Comment
Super………………
Comments are closed.