உலகம் முழுவதும் பரவி இருக்கும் இந்து கோயில்கள்..! – ஆச்சரியம் ஏற்படுத்தும் உண்மைகள்..
உலகில் இருக்கும் அனைத்து விதமான மதங்களுக்கும் முன்னோடியாக இந்து மதம் இருக்கிறது என்று நாம் ஆணித்தரமாக கூறக்கூடிய வகையில் உலகம் முழுவதும் பரவி இருக்கும் இந்துக் கோயில்கள் பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் மட்டும் தான் இந்து மதம் பறந்து விரிந்து தனது கிளைகளை பரப்பி உள்ளது என்று நினைப்பவர்களுக்கு, மிக பெரிய உண்மையை உணர்த்தக்கூடிய வகைகளில் நமது நாட்டில் இருக்கும் கோயில்களைப் போலவே வெளிநாட்டில் கட்டப்பட்டிருக்கும் இந்து கோயில்கள் இந்து மதத்தின் பெருமையை உலகுக்கு பறை சாற்றுகிறது.
அந்த வகையில் நேபாளத்தில் இருக்கும் பசுபதிநாத் கோயிலை எடுத்துக் கொள்ளலாம். இந்த கோவிலில் இருக்கும் கட்டிடக்கலை இந்து மதத்தின் பழமையை உணர்த்தக்கூடிய வகையில் உள்ளது. மேலும் இந்த கோவிலானது யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பழமையான கோயில் ஆகும்.
தனா லாட் கோவில் இந்தோனேசியாவில் உள்ளது. பாறை அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கோயில் இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ளதால் கடல் கடவுளாக இந்தக் கோயிலில் இருக்கும் கடவுளை வணங்குகிறார்கள். பதினோராம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோயில் சுற்றிலும் கடலால் சூழப்பட்டுள்ளது.
மேலும் கம்போடியாவில் இருக்கும் அங்கோர்வாட் கோயிலை பற்றி அதிக அளவு உங்களுக்கு கூற வேண்டிய அவசியம் இல்லை. கிபி 82 மற்றும் 120 ஆம் காலகட்டத்தில் கட்டப்பட்ட இந்த கோயில் கம்போடியாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது.
இந்து மதத்தின் பழமையான பாரம்பரியத்தை வெளிப்படுத்தக்கூடிய இந்த கோயில் நூற்றுக்கும் மேற்பட்ட கற்களை கொண்டு கட்டப்பட்ட கோவில்களின் தொகுப்பு என்று கூறலாம்.
அதுபோலவே மலேசியாவில் அமைந்திருக்கும் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானம் பக்தர்களின் கவனத்தை ஈர்ப்பதோடு மட்டுமல்லாமல் மிகச்சிறந்த சுற்றுலா தளமாகவும் விளங்குகிறது. இங்கு இருக்கும் முருகனின் சிலை சுமார் 42.7 மீட்டர் உயரம் உள்ளது. உலகப் புகழ்பெற்ற இந்த முருகன் கோயில் மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூருக்கு அருகில் அமைந்துள்ளது.
பர்மாவில் இருக்கும் ஸ்ரீ காளி கோயில் பர்மாவின் கட்டிடக்கலையை மிக நேர்த்தியான முறையில் வெளிப்படுத்துகிறது. இந்த கோவிலை பர்மாவின் குட்டி இந்தியா என்று அனைவரும் அழைக்கிறார்கள். யாங்கூன் பகுதியில் இந்த கோயில் அமைந்துள்ளது.
இப்போது சொல்லுங்கள் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் இந்து மதம் பரவி இருந்தது என்பது இதன் மூலம் தெரிகிறது அல்லவா..