தம்மா துண்டு களாக்காயில் ஒளிந்து இருக்கும் மருத்துவ குணங்கள்..! – அட எவ்வளவு இருக்கா..
விநாயகப் பெருமானுக்கு பிடித்த நெய்வேத்தியங்களில் ஒன்றாக இந்த களா காயை கூறலாம். நாளைக்கு கிடைக்கும் பலாக்காய் விட இன்றைக்கு கிடைக்கும் களாகாய் எவ்வளவோ பெரிது என்ற பழமொழியை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.
அப்படிப்பட்ட களாக்காயில் என்னென்ன மருத்துவ குணங்கள் உள்ளது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.
புளிப்புச் சுவையுடைய களாக்காயின் பூ, காய், பழம் வேர் போன்ற அனைத்து பகுதிகளுமே மருத்துவ குணம் நிறைந்தது. இது கண் நோய் கண்ணில் ஏற்படும் வெண்படலத்தையும் கரும்படலத்தையும் ரத்த படலத்தையும் நீக்கக்கூடிய தன்மை உடையது.
களாகாய் வேரை 50 கிராம் எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயம் ஆக்கி காலை, மாலை என இரண்டு வேளைகளில் குடித்து வர உடல் ஆரோக்கியம் ஆகும்.
இந்த இந்த பழத்தை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடும் போது புண்களை உடனே ஆற்றக்கூடிய குணம் கொண்டுள்ளது. கருப்பையில் இருக்கும் அழுக்குகளை நீக்கக்கூடிய சக்தி இதற்கு உள்ளது.
இதய நோய் உள்ளவர்கள் இந்த பழத்தின் ஜூசை சாப்பிட்டால் இதய நோயிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம் .பசியை தூண்டி விடக் கூடிய தன்மை கொண்டது. பற்களில் ஏற்படும் குறைகள் ஈறுகளில் ரத்தம் வழிகள் போன்றவற்றை தடுக்கக்கூடிய அற்புத சக்தி உள்ளது.
இந்த காயில் வைட்டமின் ஏ, சி இரும்பு சத்து போன்ற பலவிதமான சத்துக்கள் காணப்படுவதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதை உண்பதின் மூலம் ஆரோக்கியம் ஏற்படும். பிரசவ காலத்துக்கு பின் பெண்களுக்கு ஏற்படுகின்ற வாந்தி மயக்கத்தை தடுக்கக்கூடிய ஆற்றல் கொண்டது.
பித்தத்தை தடுத்து ஆஸ்துமா நோயிலிருந்து உங்களை தற்காத்துக் கொள்ள இது உதவி செய்வதோடு, சரும நோய்களை வராமல் தடுக்கக்கூடிய ஆற்றல் உள்ளது. வைட்டமின் சி அதிக அளவு இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தரும்.
அசிடிட்டி பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் இதை அதிக அளவு உண்ணக்கூடாது. அதுபோல் ஆண்களின் விந்தணுக்களின் தன்மையை பாதிக்க கூடிய சக்தி இதற்கு இருப்பதால் இவற்றை குறைவாக எடுத்துக் கொள்வது நன்மை பயக்கும்.
எனவே இந்த பழம் கிடைக்கும் பட்சத்தில் நீங்கள் அவற்றை பச்சையாகவோ அல்லது ஊறுகாய் வடிவிலோ உண்டு வரலாம்.