“பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்டு இருக்கும் தண்ணீர்..!” இனி வேண்டவே வேண்டாம்..
இன்று பெரும்பாலானோர் பயணத்தின் போதும், ஏன் வீடுகளில் கூட பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்டிருக்கக்கூடிய தண்ணீரை தான் குடிநீராக பயன்படுத்தி வருகிறார்கள். அப்படி பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை பயன்படுத்துவதன் மூலம் எண்ணற்ற விளைவுகள் ஏற்படுகிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
மேலும் பிளாஸ்டிக் பாட்டில்களில் வைக்கப்பட்டிருக்கும், தண்ணீரை நீங்கள் வெயிலில் வைத்திருக்கும் போது பிளாஸ்டிக் பாட்டில் இருக்கக்கூடிய மைக்ரோ பிளாஸ்டிக் எனப்படும் வேதிப் பொருளானது தண்ணீரில் கலந்து வெளியேறும்.
இந்த நீரை நீங்கள் பருகுவதின் மூலம் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் பலவிதமான கோளாறுகள் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் சுற்றுச்சூழலும் பாதிப்படைகிறது. அது மட்டும் அல்லாமல் தனி நபரின் பிளாஸ்டிக் கழிவுகள் ஐந்து ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரிக்க இந்த பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் உறுதுணையாக இருப்பதாக பல தகவல்கள் வெளிவந்துள்ளது.
அதிலும் குறிப்பாக நம் நாட்டில் மட்டும் வருடத்திற்கு 3.5 பில்லியன் அளவு பிளாஸ்டிக் கழிவுகள் சேர்வதாக ஒரு தர ஆய்வு கூறுகிறது.
பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்டு இருக்கக்கூடிய தண்ணீரை குடிப்பதினால் அதுவும் தொடர்ந்து குடிப்பதன் மூலம் உங்கள் உடலில் இருக்கக்கூடிய ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது.
இப்படி ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வு ஏற்படுவதால் உடல் சார்ந்த இயக்கத்தில் பலவிதமான பிரச்சனைகளை இது ஏற்படுத்தி விடுகிறது என்ற அதிர்ச்சிகரமான உண்மையை தற்போது விஞ்ஞானிகள் வெளியிட்டு இருக்கிறார்கள்.
மேலும் இந்த தண்ணீரை தொடர்ந்து பருகி வரும் ஆண்களுக்கும் ஹார்மோன் பிரச்சனைகள் ஏற்படுவதாகவும், இவர்களின் விந்து உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுவதால் நிரந்தர மலட்டுத்தன்மைக்கு இது காரணமாக அமைகிறது என்ற அபாயகரமான உண்மையை கூறியிருக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் கல்லீரலில் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடிய தன்மை இந்த பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்டு இருக்கக்கூடிய தண்ணீருக்கு உள்ளது என்பதால் உடலுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீரை மறந்து விட்டு உங்கள் வீடுகளில் இருந்து செம்பு அல்லது சில்வர் வாட்டர் பாட்டில் தண்ணீரை எங்கு போட்டு சென்றாலும் கொண்டு சென்று பருகுங்கள்.
இதன் மூலம் உங்கள் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள். பாட்டில்களில் அடைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை வாங்கிக் கொடுப்பதை ஒரு பேஷனாக கொண்டிருந்தால் இனி அவற்றை தவிர்ப்பதின் மூலம் கட்டாயம் உங்கள் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.