“சுதந்திர தினத்தன்று வீடுகளில் பறக்கட்டும் தேசியக்கொடி..! – ஹர் கர் திரங்கா அழைப்பு…
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பல உயிர்களை தியாகங்களை செய்து இந்தியா சுதந்திரம் அடைந்தது. மேலும் இந்த இந்திய சுதந்திரப் போரில் கத்தி இன்றி ரத்தம் இன்றி பாடுபட்ட தேசத் தந்தை மகாத்மா காந்தி பற்றி அனைவருக்கும் நினைவு இருக்கலாம்.
இதனை அடுத்து வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தினத்தை கொண்டாட கூடிய வேளையில், நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாளை ஆகஸ்ட் 13 முதல் ஆகஸ்ட் 15 வரை வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் தேசிய கொடியை பறக்க விட அழைப்பு விடுத்திருக்கிறார்.
இதற்குக் காரணம் இது நமது பவள விழா தேசிய தின கொண்டாட்டம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். எனவே தான் இந்த மூன்று நாட்களும் ஒவ்வொரு வீட்டிலும் கொடியை ஏற்ற அரசு உத்தரவு தந்துள்ளது. மேலும் இதற்காக ஹர் கர் திரங்கா என்ற பிரச்சாரம் நாடு முழுவதும் ஒலித்த வண்ணம் உள்ளது.
இந்த தேசியக் கொடியில் இருக்கும் மூன்று வண்ணங்கள் நமது நாட்டின் பெருமை, கலாச்சாரம் மற்றும் எதிர்காலத்தின் பிரதிபடிப்பாக உள்ளது. இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் அதன் பன்முக தன்மையின் சின்னமாக இந்த தேசிய கொடியை கூறலாம்.
நாம் நம்மை பல்லாயிரம் ஆண்டுகளாக அடிமைகளாக ஆண்டு வந்த வெள்ளையர்களை விரட்டி அடித்து நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த நிகழ்வை ஒருமித்த ஒற்றுமை உணர்வோடு கொண்டாடுவதின் மூலம் நமது பாரத அன்னை வீரு கொண்டு எழுவதோடு மட்டுமல்லாமல் மற்ற நாடுகளுக்கும் சிம்ம சொப்பனமாய் திகழுவாள்.
இதனை அடுத்து நமது பிரதமர் வீட்டிற்கும் இந்த அழைப்பினை தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவு செய்து இருக்கிறார். எனவே அனைவரும் ஒன்றுபட்டு இந்த சுதந்திர தினத்தை சீரும் சிறப்புமாக கொண்டாட வேண்டும்.
இந்த 75 ஆவது சுதந்திர தினத்திற்கான வாழ்த்துக்களை உங்கள் அனைவருக்கும் Deep talk tamil வலைத்தளம் மற்றும் youtube சேனல் சார்பாக முன்பாகவே தெரிவித்துக் கொள்கிறோம். பிறப்பால் நாம் தமிழர்கள் என்றாலும் வளர்ப்பால் இந்தியர்களாக இருப்பது சிறப்பு என்று உணர்வோம்.
எனவே நாளை ஆகஸ்ட் 13 முதல் 15 வரை நடைபெற இருக்கின்ற இந்த ஹர் கர் திரங்கா இயக்கத்தில் நீங்கள் அனைவரும் பங்கேற்று உங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி அதனை HTTPS://harghartiranga.com என்ற வலைதள பக்கத்தில் பதிவேற்றும் படி நமது பாரதப் பிரதமர் அன்போடு கேட்டுக் கொண்டிருக்கிறார்.