முன்னோர்கள் விளையாடிய “கிட்டிப்புள்” – இன்றைய கிரிக்கெட்…
நமக்கென்று ஒரு பாரம்பரியம் பண்பாடு இருந்தது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். அதுபோல் தான் விளையாட்டிலும் நமது விளையாட்டைப் போல் வேறு எதுவும் இல்லை என்று கூறும் அளவுக்கு நிறைய விளையாட்டு முறைகளை நம் முன்னோர்கள் பின்பற்றி வந்தார்கள்.
அவற்றில் ஒன்றுதான் இந்த “கிட்டிப் – புல்” எனப்படும் பாரம்பரிய விளையாட்டு. இந்த விளையாட்டு இன்னும் கிராமப்புற பகுதியில் உள்ள சிறுவர்கள் விளையாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். நகர்புறத்தில் சேர்ந்தவர்களுக்கு இந்த வார்த்தை புதிதாக தெரியலாம்.கில்லி என்ற மற்றொரு பெயரும் இவ்விளையாட்டுக்கு உண்டு.
இந்த விளையாட்டுக்கு தேவையான பொருள்கள் என்ன என்று பார்த்தால் உங்களுக்கு வியப்பாக இருக்கும். வெறும் 15 இன்ச் நீளமுள்ள ஒரு குச்சி மற்றும் 4 இன்ச் நீளமுள்ள மற்றொரு சிறிய குச்சி. இந்த நாலு இன்ச் நீளமுள்ள பகுதியின் இரு முனைகளும் கூராகப்பட்டு இருக்கும்.
இதுவும் நமது கிரிக்கெட்டை போலவே ஒரு குழு விளையாட்டு தான். இதில் நம் கிரிக்கெட் பேட் க்கு பதிலாக 15 இன்ச் குச்சியை பேட்டாக சிறுவர்கள் பயன்படுத்துவார்கள். பந்துக்கு பதிலாக 4 இன்ச் நீளமுள்ள இரு முறைகளும் கூராக்கப்பட்ட குச்சி பயன்படும்.
இந்த விளையாட்டும் ஒரு பெரிய மைதானத்தில் தான் விளையாடப்படும். இதில் 2 பேர் முதல் 10 பேர் வரை குழுவாகக் கூடி விளையாடலாம். இங்கு பேட்ஸ்மேன் மற்றும் பவுலரும் ஒருவர்தான். எப்படி என்று தானே யோசிக்கிறீர்கள்.
இந்த விளையாட்டை விளையாடுவதற்கு முன் தரையில் சிறிதாக ஒரு குழி போல் ஏற்படுத்தி அந்த குழியில் 4 இன்ச் நீளமுள்ள குச்சியை வைத்து பின் அந்த குழிக்குள் 15 இன்ச் நீளமுள்ள குச்சியை வைத்து அதனை தட்டுவார்கள்.
அந்த குச்சி எவ்வளவு தூரம் செல்கிறதோ பிரச்சினை இல்லை ஆனால் அதனை கேட்ச் பிடித்து விட்டால் விளையாடியவர் அவுட். பிடிக்கவில்லை என்றால் அந்த சிறிய குச்சி எவ்வளவு தூரத்தில் விழுந்து இருக்கிறதோ அதனை அந்த தூரம்வரை 15 இன்ச் குச்சியை வைத்து தரையிலிருந்து அதாவது தட்டப்பட்ட இடத்திலிருந்து அளந்து விடுவார்கள்.
அளவுகள் ஐந்து ,10, 15 …. என்று அது விழுந்த தூரத்தைப் பொறுத்து அமையும். இதனை அவர்கள் ரன்னுக்கு பதிலாக பாயிண்ட் டாக எடுத்துக் கொள்வார்கள். யோசித்து பாருங்கள் நாம் தற்போது விளையாடும் கிரிக்கெட்டிலும் இதேபோல்தான் பந்தை வேறொருவர் வீசுகிறார், அதை மற்றொருவர் அடிக்கிறார்.
பந்து எவ்வளவு தூரம் செல்கிறதோ அதை எடுக்க ஒருவர் முயலும்போது அடித்தவர் ஓடி வந்து ரன்களை குவிக்கிறார் அல்லவா. நமது இந்த “கிட்டிப்புள் ” விளையாட்டை பார்த்தான் கிரிக்கெட் விளையாட்டு வந்ததாக எங்கள் ஊரில் உள்ள முதியவர்கள் கூறுவார்கள்.
நீங்கள் யோசித்துப் பார்த்தாலே உங்களுக்கும் புரியும். நமது “கிட்டிப் – புள்” தான் கிரிக்கெட் ஆக மாறியுள்ளது என்பதை நாம் அனைவரும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். இந்த “கிட்டிப்புள்” விளையாட்டில் எத்தனை சிறுவர்கள் மண்டை உடைந்து ரத்தம் சிந்தி இருக்கிறார்கள் என்று நினைத்துப் பார்த்தால் வியப்பாகத்தான் உள்ளது. காலப்போக்கில் இந்த “கிட்டிப்புள்” மருவி கிரிக்கெட் என்றானதோ.