இந்திய வளங்களை சூறையாடிய கஜினி முகமது..! சோமநாதர் கோயில் படையெடுப்பு..
“என்ன வளம் இல்லை இந்த நாட்டில், ஏன் கையேந்த வேண்டும் வெளிநாட்டில்” என்ற சொற்றொடர்களுக்கு ஏற்ப இந்தியாவின் செல்வங்களின் மீது கொள்ளை ஆசை கொண்டு கொள்ளை அடிப்பதற்காக பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளை தாக்க படையெடுத்து வந்தவன் தான் கஜினி முகமது.
ஆசிய கண்டத்தையே தன் காலடியில் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில் கிபி ஆயிரம் முதல் 1027 வரை இந்தியாவின் மீது தொடர்ந்து 17 முறை போர் தொடுத்து 18 வது முறை வென்ற இவனது முயற்சியை பாராட்ட வேண்டும்.
ஆரம்பத்தில் கிபி 1001 கஜினி முகமது தனது பழைய எதிரியான ஜெய்பாலுடன் போர் தொடுத்து 15000 வீரர்களை கொன்று குவித்தார்கள். அது மட்டுமல்லாமல் ஜெயபால் மற்றும் அவரது உறவினர்கள் அனைவரும் கஜினி முகமதுவின் முன் நிறுத்தப்பட்டு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டதோடு, அவர்களை விடுவிக்க சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் தினார் பணமும், 5 லட்சம் இந்தியர்களும் அடிமையாக வேண்டும் என்ற நிபந்தனையை விதித்தார்கள்.
இதனை அடுத்து நாகர்கோர்ட் பகுதியில் இருந்த கோவிலில் அதிக செல்வம் இருப்பதாக கிடைக்கப்பட்ட செய்தியை அறிந்து அந்த நாகர்கோட்டையை தகர்க்க 1009 ஆம் ஆண்டு கஜினி முகமது புறப்பட்டான். அங்கு இருந்த விலைமதிப்பில்லாத தங்கம், வைரம் போன்ற நகைகளை அள்ளி சென்றான்.
இதனை அடுத்து இது போலவே செல்வம் குவிந்து இருக்கும் சோமநாத கோவிலை நோக்கி தனது படைகளோடு புறப்பட்டான் கஜினி முகமது. இந்தியாவிலேயே அதிக அளவு செல்வமும், புகழும் நிறைந்த கோயிலாக இந்த கோயில் விளங்கியது.
1025 ஆம் ஆண்டு இந்தக் கோயில் கஜினி முகமது படைகளால் பலவிதமான சேதங்களுக்கு உட்படுத்தப்பட்டது. கோயிலை விட்டுக் கொடுக்காமல் ராஜபுத்திர அரசர்களும், வீரர்களும் கோயிலை பாதுகாத்து கஜினி முகம்மதுக்கு எதிராக சண்டை போட்டார்கள்.
மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த போரின் இறுதியில் கஜினியின் படை வெற்றி பெற்று சுமார் 20 லட்சம் தினார் மதிப்புள்ள செல்வத்தை கொள்ளையடித்துச் சென்றது.
கஜினி முகமதுவின் இந்த வெற்றிக்கு காரணம் அவரது குதிரை படை தான். அக்காலத்தில் நம் மன்னர்கள் யானைகளை தான் அதிகம் போரில் பயன்படுத்தினார்கள். மேலும் துருக்கிய வீரர்களின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் இருந்தது.இது கஜினி முகமதின் வெற்றிக்கு வழி செய்தது.