விஜய நகர மன்னரால் கட்டப்பட்டதா? – திண்டுக்கல் கோட்டை..
திண்டுக்கல் என்று பெயர் வருவதற்கு காரணமே ஊரின் நடுவே திட்டை போல ஒரு பெரிய மலை இருந்ததால் தான் இதை திண்டுக்கல் என்று அழைத்தார்கள். இதற்கு முன்பு இந்த ஊரை விட்டீஸ்வரன் என்று அழைத்திருக்கிறார்கள்.
பூட்டுக்கு பெயர் பெற்ற திண்டுக்கல் 14ஆம் நூற்றாண்டில் விஜய நகர பேரரசால் ஆளப்பட்டது. திண்டுக்கல்லில் இருக்கக்கூடிய கோட்டையானது விதைய நகர பேரரச மன்னர் முத்துக்கிருஷ்ணப்ப நாயக்கரால் கட்டப்பட்டது.
இந்த கற்கோட்டையில் கோவிலும் உள்ளது தனி சிறப்பாக உள்ளது. விஜயநகர பேரரசு காலத்திற்கு பிறகு எந்த கோட்டையை ஹைதர் அலி திப்புசுல்தான் ஆகியோர் கைப்பற்றி இருக்கிறார்கள்.
இதனை அடுத்து ஆங்கிலேய படையானது 1799 ஆம் ஆண்டு இந்த கோட்டையை தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தது. இன்றைய தலைமுறைக்கு இந்த கோட்டையைப் பற்றி அதிக அளவு விஷயங்கள் தெரியாது என்றுதான் கூற வேண்டும். அந்த வகையில் கோட்டையைப் பற்றிய முக்கியமான சில விஷயங்களை இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
திண்டுக்கல்லில் அமைந்திருக்கும் மலைக்கோட்டை ஆனது கடல் மட்டத்திலிருந்து 360 அடி உயரத்தில் 400 மீட்டர் நீளமும் 300 மீட்டர் அகலமும் உடைய கோட்டையாக திகழ்கிறது.
1755 ல் ஹைதர் அலி தனது மனைவி மகன் திப்பு சுல்தானுடன் திண்டுக்கல்லில் குடியேறி இருக்கிறார் 1790 வரை திப்பு சுல்தான் திண்டுக்கல்லை ஆட்சி செய்திருக்கிறார். இந்த திண்டுக்கல் கோட்டையில் சிறைக்கூடம் பீரங்கி தடம் ஆகியவை இருந்தது.
பிரெஞ்சுகாரர்களின் கட்டிடக்கலை அமைப்பில் கட்டப்பட்டு இருக்கும் இந்த கோட்டையானது பாதுகாப்பு அரணாக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் விளங்கியது. இந்த மலைக்கோட்டையின் மீது நீர் சுனைகள் உள்ளது இந்த நீரினை சிறை காவல் அதிகாரிகள் குளிப்பதற்கும் குடிப்பதற்கும் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
எதிரிகள் யாரும் எளிதில் உள்ளே நுழையாத வண்ணம் கோட்டையைச் சுற்றி கோட்டைகுளம் அமைந்துள்ளது. இந்த கோட்டை குளத்தை தான் குதிரைகளின் லாயமாக பயன்படுத்தி இருக்கிறார்கள். எதிரிகள் எளிதில் மேலே செல்ல முடியாதபடி மிக ஆழமான அகழிகளும் இருந்துள்ளது.
மலைக்கோட்டையின் மேல் இருக்கும் தம்பிரான் சுவாமிகள் கல்வெட்டில் விஜய நகர மன்னர் கிருஷ்ணதேவராய கோயிலுக்கும் பொதுமக்கள் அளித்த நன்கொடைகள் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது. மேலும் 1790 இல் நடந்த மைசூர் யுத்தம் பற்றி இதில் விளக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கோட்டையில் பாறைகளுக்கு நடுவே சிறைக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள இரும்பு கதவுகள் மேற்பரப்பில் புகை போக்கி பாதாள சிறையில் சுமார் 20 ஆடைகள் காணப்படுகிறது. இந்த அறைக்குள் சூரிய வெளிச்சம் புகாதபடி அமைத்திருக்கிறார்கள் மேற்பரப்பில் செங்கல் சுண்ணாம்பு கடுக்காய் கொண்டு பூசி இருக்கிறார்கள்.
இந்தக் கோட்டையில் இருந்து எதிரிகள் எந்த பக்கம் வருகிறார்கள் என்று கண்காணிக்க கூடிய கோபுரங்கள் உள்ளது. எந்த திசையில் இருந்து எதிரிகள் வந்தாலும் எளிதில் பார்க்கக் கூடிய வகையில் கட்டமைக்கப்பட்டு இருக்கக்கூடிய இதில் பீரங்கிகளும் வைக்கப்பட்டுள்ளது.