ஸ்வஸ்திக் எதைக் குறிக்கிறது? மலைக்க வைக்கும் மர்மங்கள்…
பெரும்பாலான இந்துக்கள் அனைவருக்கும் ஸ்வஸ்திக் குறியீடு பற்றி மிகவும் நன்றாக தெரியும். இந்த குறியீட்டை நீங்கள் முழு முதற்கடவுளான விநாயகரின் கைகளில் இருப்பதை பார்த்திருப்பீர்கள்.
எந்த காரியமும் தங்கு தடை இல்லாமல் செய்வதற்கு வழிபடக்கூடிய விநாயகர் பெருமானின் கையில் இருக்கும் இந்த சின்னமானது வெற்றி சின்னமாக கூறலாம்.
இந்த சின்னம் செங்கோண வடிவில் இருக்கும். மேலிருந்து, கீழாகவும் இடமிருந்து வலமாகவும் குறுக்கில் செல்லும் கோடுகளை தான் நாம் ஸ்வஸ்திக் என்று கூறுகிறோம்.
வீடுகளில் பூஜை அறைகளிலும் வீட்டின் முற்றத்திலும் கோலமாக இதை போடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். லாபத்தை குறிக்கக்கூடிய ஒரு சின்னமாக இது இருப்பதால் மஞ்சள் மற்றும் குங்குமம் கொண்டு இதை வரையக்கூடிய பெண்களும் உண்டு.
இந்த சின்னத்தில் இருக்கக்கூடிய எட்டு கோடுகள், எட்டு வகையான திசைகளை குறிப்பதாகவும் நடுவில் வைக்கப்படும் புள்ளிதான் நமது ஆத்மாவாகவும் கூறுகிறார்கள். அது மட்டுமல்லாமல் 4 வேதங்களை இது உணர்த்துவதாகவும், 4 திசைகளையும், நான்கு யுகங்களையும், நான்கு மூலங்களையும் இது குறிப்பதால் தான் லாபத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.
வீட்டுக்குள் எந்த விதமான துர்சக்தியையும் அண்டவிடாமல் செய்கின்ற ஆற்றல் இதற்கு உள்ளது. இந்த சின்னமானது 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு பழமையானது என்று கூறுகிறார்கள். மேலும் சிந்து சமவெளி நாகரிகத்தில் இது பயன்பாட்டில் இருந்து உள்ளதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
ஆரிய இனவாத கொள்கையில் தீவிர நம்பிக்கை கொண்ட சர்வாதிகாரி ஹிட்லர் தனது நாஜிக் கட்சியின் சின்னமாக இந்த ஸ்வஸ்திக் பயன்படுத்தி இருக்கிறார். சமஸ்கிருதத்தில் ஸ்வஸ்திகா என்பது அதிர்ஷ்டம் நன்மை தரும் என்ற பொருளைத் தரும்.
ஸ்வஸ்திக் சின்னம் பற்றி பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் இந்த சுவஸ்திக் சின்னத்தில் மிகப்பெரிய அளவு சக்தி உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். மருத்துவ விஞ்ஞானியான ஹாட்மன்ட் அனர்சட் உருவாக்கிய ஆவேயன்டினா என்ற மின் அணு கருவியை கொண்டு இந்த ஸ்வஸ்திக் சின்னத்தை ஆய்வு செய்து பார்த்திருக்கிறார்.
அப்போது போது தான் மறைத்து வைக்கப்பட்ட ஒரு ரகசியம் தெரிந்து உள்ளது. அது என்னவெனில் இந்த ஸ்வஸ்திக் வடிவமானது ஒரு லட்சம் போஸ் அலகுகள் கொண்ட மின் சக்தியை வெளிப்படுத்தியுள்ளதாக அவர் பதிவு செய்திருக்கிறார்.
ஸ்வஸ்திக் மின் சக்தியானது நீர் மின் சக்தியை கொண்டு இருப்பதால் பெரும்பாலான வீடுகளில் இதன் மூலம் நன்மை கட்டாயம் ஏற்படும் என்று கூறி இருப்பது நம்மை மலைக்க வைத்து விட்டது.