“உலகிலேயே காஸ்ட்லியான சுஷி உணவு..!” – வாயை பிளக்க வைக்கும் விலை ₹2 லட்சம்..
விலைவாசி எவ்வளவு அதிகரித்து விட்டது என்று நாம் பேசி வருகிறோம். அது எல்லா வகையான பொருட்களிலும் பிரதிபலித்துள்ளது என்ற உண்மை தற்போது தெரியவந்துள்ளது.
இதற்கு காரணம் உலகிலேயே அதிக விலைக்கு விற்கப்படக்கூடிய ஜப்பானிய உணவு பண்டத்தின் விலையைக் கேட்டால் நீங்கள் வாய் பிளந்து விடுவீர்கள். அட.. சாப்பிடுகின்ற உணவிற்கா? எந்த விலை என்று நீங்கள் பதறுவீர்கள்.
அது முற்றிலும் உண்மையான ஒன்றுதான். ஜப்பானில் தயாரிக்கப்படும் சுஷி என்ற உணவுதான் உலகிலேயே மிக காஸ்ட்றியான உணவாக உள்ளது என கூறலாம். அப்படிப்பட்ட சாதனை படைத்த அந்த உணவு பற்றிய சுவாரசியமான தகவல்களை பார்க்கலாம்.
ஜப்பானில் இருக்கக்கூடிய ஓசாகாவில் உள்ள ஒரு உணவகத்தில் தான் இந்த உணவை தயாரித்து வருகிறார்கள். இந்த உணவின் தனித்தன்மை என்ன என்று முதலில் தெரிந்து கொள்ளலாம். இந்த உணவு பொருளை செய்வதற்கு இவர்கள் சுஷி வினிகரை டோக்கியோ மற்றும் தீவிலிருந்து பெறுகிறார்கள்.
இந்த உணவை செய்வதற்கு தேவையான காளான்களை சீனாவில் இருந்து வரும் மட்ஸ் ஷூ டேக் மற்றும் இத்தாலியில் இருந்து கிடைக்கும் கருப்பு உப்பு, வடக்கு அட்லாண்டிக் பகுதியில் இருந்து கிடைக்கும் இறால்களை பயன்படுத்துகிறார்கள்.
உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெறப்படும் பொருட்களை ஒருங்கிணைத்து ஜப்பானிய பாரம்பரிய முறைப்படி இந்த உணவை தயாரிப்பது இதன் சிறப்பு அம்சமாக கருதப்படுகிறது.
மேலும் இந்த உணவு பண்டத்தில் பயன்படுத்தப்படும் டைல் ஃபிஷ் ஜப்பானியர்களின் தெற்கே இருக்கக்கூடிய கியூஸ் தீவில் இருந்து பெறப்படுகிறது. மேலும் இறால் வகைகளை ஹொக்கைடோவின் வடக்கே உள்ள தீவுகளில் இருந்து பெறுகிறார்கள்.
இந்த பொருளை செய்வதற்கு சுமார் 20 மேற்பட்டபொருட்களை கலந்து ஜப்பானிய முறைப்படி செய்கிறார்கள். எனவே தான் இதன் விலை மதிப்பில் சுமார் இரண்டு லட்சம் ஆகும்.
இதனை அடுத்து உலகிலேயே மிக விலை உயர்ந்த உணவு பண்டமாக இந்த உணவு உள்ளது. இந்த உணவை சுவைத்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தற்போது ஏற்படுகிறதா? அப்படி ஏற்பட்டால் நிச்சயமாக இரண்டு லட்சம் ரூபாய் இருந்தால் மட்டும் தான் அது சாத்தியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.