செவ்வாய் கிரகம் ஆச்சரியம் தரும் நாசாவின் கியூரியாசிட்டி ரோவர்..!” – ஆய்வு அலசல்..
பூமியில் நீர் உள்ளதால் உயிரினங்கள் உள்ளது.அது போல ஆரம்ப காலத்தில் பூமியை போல செவ்வாய் கிரகத்திலும் உயிரினங்கள் இருந்து இருப்பதற்கான சாத்தியங்கள் இருக்கலாம் என்ற பைரனின் கூற்றை மெய்யாக்கும் படியாக உள்ளது நாசாவின் கியூரியாசிட்டி ரோவரின் ஆய்வு கூறுகிறது.
ஆம்.நான்கு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தின் பூமத்திய பகுதியில் ஒரு மிகப் பெரிய பள்ளம் இருந்தது. அந்தப் பள்ளத்தில் வெள்ளம் இருந்ததாக ஆய்வுகள் கூறுகிறது. இதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்து இருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது.
சமீபத்தில் நாசாவின் விஞ்ஞான அறிக்கையின்படி கியூரியாசிட்டி ரோவர் கடந்த நவம்பர் 2011 முதல் சேகரித்த தரவுகளை ஆய்வு செய்த போது இந்த பிரம்மாண்டமான வெள்ளமானது ஒரு விண்கல் தாக்கத்தில் ஏற்பட்ட வெப்பத்தால் அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த பனி உருகி பிரம்மாண்ட வெள்ளம் உருவாகி இருக்கலாம் என எண்ணப்படுகிறது.
இதனை பகுப்பாய்வின் அடிப்படையில் ஆய்வு செய்த அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் கற்பனை செய்ய முடியாத அளவில் இந்த வெள்ளமானது பூமியில் உள்ள கடலில் ஏற்படும் சிற்றலை போலவே உள்ளது என்றனர்.
அத்தோடு ரோவர் க்யூரியாசிட்டி தந்த தரவுகளைப் பயன்படுத்தி முதல் முறையாக மெகாஃப்ளூட்களை செவ்வாய் கிரகத்தில் அடையாளம் கண்டதாக கார்னெல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வு இணை ஆசிரியர் ஆல்பர்டோ ஜி பைரன் கூறினார்.
அது மட்டுமல்ல செவ்வாய் கிரகத்தில் நீர்,காற்று மற்றும் புவியியல் அம்சங்கள், பூமியின் மேற்பரப்பை வடிவமைத்த ஓத்த செயல்முறைகளை தான் வெளிப்படுத்துகிறது என்கிறார்.
மேலும் கேல் பள்ளத்தாக்கில் உள்ள வண்டல் அடுக்குகளில் மாபெரும் அலை வடிவ அம்சங்களை மெகாரிப்பிளஸ் அல்லது ஆன்டிடியூன்ஸ் என அழைக்படுவதாகவும் அவை சுமார் 30 அடி உயரமும் 450 அடி இடைவெளியும் கொண்டதாக உள்ளதாம்.
இது சுமார் இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் பனி உருகுவதால் ஏற்படும் அம்சங்களை ஓத்துள்ளது என இயற்பியல் பேராசிரியர் ஈசாத் ஹெய்டாரி அமெரிக்காவில் உள்ள ஜாக்சன் மாநில பல்கலைகழகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு இந்த ஆய்வில் செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்திற்கு மிகப்பெரிய காரணம் என்ன என்றால் வெப்பத்திலிருந்து பனி உருகுவது ஆகும். இதனால் கிரகத்தில் உறைந்திருந்த நீர்த்தேக்கங்களில் இருந்து கார்பன் டை ஆக்சைடு மற்றும் மீத்தேன் வெளி வருவதோடு நீராவி மற்றும் வாயுக்களின் வெளியீடு இணைந்து செவ்வாய் கிரகத்தில் குறுகிய மற்றும் வெப்பமான நிலமையை உருவாக்குவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக நீர் ஒடுக்கம் ஏற்பட்டு நீராவி மேகங்களை உருவாக்குவதன் மூலம் செவ்வாய் கிரகம் எங்கும் மழை பெய்யக்கூடும். இந்த நீரானது கேல் பள்ளத்தாக்கை நோக்கி சென்றுயிருக்கலாம். இதுவே கேல் பள்ளத்தில் உள்ள மவுண்ட் சார்ப்பில் இருந்து வரும் நீர் உடன் இணைந்து இது மிக பிரம்மாண்டமான வெள்ளத்தை உருவாக்கி இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதிகிறார்கள்.
ஏற்கனவே கியூரியாசிட்டி ரோவர் அனுப்பிய படங்களில் தொடர்ச்சியாக ஏரிகள் மற்றும் நீரோடைகள் செவ்வாயில் இருப்பதை உறுதி செய்துள்ள நிலையில் இங்கு நுண்ணுயிரிகள் வாழ் திறன் உடையதாக இருக்கும் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.