“என்னது.. டைனோசர்கள் காலத்துக்கு முன்பே வாழ்ந்த உயிரினம்..!” – உயிரோடு உலாவுதா?
விசித்திரங்கள் நிறைந்திருக்கும் இந்த உலகத்தில் மிரட்டக்கூடிய வகையில் ஆச்சரியங்கள் நிலவி வருகிறது. அந்த வகையில் இந்த பூமியில் ஒரு காலத்தில் அனைவரையும் மிரள வைத்த டைனோசர்கள் பற்றி உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் அவற்றை பற்றி உங்களுக்கு அதீத அறிவு இருக்கும்.
சுமார் 120 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மிரட்டி கொண்டிருந்த டைனோசர்களைப் போலவே இந்த டைனோசர்கள் வாழும் காலத்திற்கு முன்பே வாழ்ந்து வரும் உயிரினம் இது தான் என்று கூறினால் கட்டாயம் உங்களுக்கு சிரிப்பு வரும்.
அட, அது எப்படி.. அந்த உயிரினம் என்ன? என்று நீங்கள் யோசிப்பதற்கு முன்பே அந்த உயிரினத்தின் பெயரை கூறி விடுகிறேன். அதன் பின் சிரிப்பதும், சிரிக்காமல் இருப்பதும் உங்கள் சாய்ஸ்.
அந்த உயிரினம் தினமும் சமையல் அறையில் பெண்களை மிரட்டக் கூடியது. பாத்ரூமுக்கு பெண்கள் போகும் போது அதை பார்த்து விட்டால் அலறுவார்கள். அட.. நீங்கள் நினைப்பது பல்லி தானே. ஆனால் அது அல்ல விடை.
இப்போது உங்களுக்கு புரிந்து இருக்கும். அது கரப்பான் பூச்சி என்று. இந்த கரப்பான் பூச்சி தான் டைனோசர்கள் காலத்திற்கு முன்பிருந்தே இன்று வரை வாழ்ந்து வரக்கூடிய அற்புதமான உயிரினம்.
இந்த கரப்பான் பூச்சியானது 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே பூமியில் தோன்றி விட்டது. சுமார் 4600 வகைகள் இதில் உள்ளது. 30 இனங்கள் மட்டுமே மனிதனின் வாழ்விடத்தில் வாழ்வதாக அறிவியல் அறிஞர்கள் கூறி வருகிறார்கள்.
இந்த கரப்பான் பூச்சியின் தலையை நீங்கள் துண்டித்து விட்டாலும், கரப்பான் பூச்சி ஒரு வாரத்திற்கு உயிரோடு இருக்கக் கூடிய தன்மை கொண்டது.
இது அப்படி உயிரோடு இருப்பதற்கு காரணம் அதன் உடலில் இருக்கும் துளைகள் மூலம் தான் இவை சுவாசிக்கிறது. இந்த கரப்பான் பூச்சிக்கு எதிரிகளாக இருக்கக்கூடிய உயிரினங்கள் பல்லி மற்றும் சிலந்தி தான்.
கரப்பான் பூச்சி சராசரியாக ஒரு வருடம் வரை உயிர் வாழக்கூடியது. நொடிக்கு 5 மீட்டர் வேகத்தில் ஓடக்கூடிய தன்மை இருக்கும். 18 கால்களைக் கொண்டிருக்கும் இதற்கு மனிதனின் தலையில் எப்படி முடி வளர்கிறதோ அது போல கால் உடைந்து விட்டாலும் வளரக்கூடிய தன்மை கொண்டது.
தென் அமெரிக்காவில் ஆறு அங்குலத்தில் இருக்கக்கூடிய கரப்பான் பூச்சி கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பூச்சியின் மூலம் சுமார் 33 வகையான பாக்டீரியாக்களை பரப்ப முடியும்.
அட.. கரப்பான் பூச்சியில் எத்தனை சுவாரஸ்யமான விஷயங்கள் உள்ளது என்பதை நீங்கள் தற்போது புரிந்து இருப்பீர்கள் என நம்புகிறோம்.