“மூங்கிலில் மறைந்திருக்கும் கட்டுமான பொறியியல்..!” – இவ்வளவு இருக்கா?
புல் வகையைச் சேர்ந்த மூங்கில் வட்ட வடிவமான தண்டினை கொண்டுள்ளது. கட்டுமான பொறியியலை பொறுத்த வரை வட்டமான வடிவமானது மிகவும் உறுதியானது.
இந்நிலையில் எத்தகைய காற்று, சூறாவளி போன்றவை வீசினாலும் மிகப்பெரிய மரங்கள் முறிந்து விடும். ஆனால் மூங்கில் அப்படி முறிந்து விழுவதற்கான சாத்தியக்கூறு குறைவாக இருப்பதற்கு காரணம் அதன் தண்டு வட்ட வடிவமான கணுக்களை கொண்டிருப்பதால் தான் நிலைத்து நிற்கிறது.
சதுர வடிவ, செவ்வக வடிவ கட்டிடங்களை காட்டிலும் ,வட்ட வடிவ கட்டிடங்கள் நிலநடுக்கத்தை தாக்குப் பிடிக்க கூடிய அமைப்பு கொண்டது என்பது தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வட்ட வடிவமான கணுக்களை கொண்டு இருக்கக்கூடிய மூங்கில் குழாய் வட்ட வடிவத்தை கொண்டுள்ளது.
அதுவே மூங்கில் குழாயில் திடமான பொருள் இருந்தால் இந்த மூங்கிலின் வலிமை தன்மை குறைந்து இருக்கும். ஆனால் மூங்கில் உடைய முழு நீளம் அதில் உள்ள கணுக்களில் துண்டிக்கப்படுகிறது. இந்த இரண்டு கணுக்களுக்கு இடைப்பட்ட நீளம் கட்டுமானப் பொறியியலில் “ஆற்றல் மிக்க நீளம்” என்று அழைக்கிறார்கள்.
மேலும் இதன் மூலம் இதன் நீளம் அதிகரித்தால் விறைப்பு தன்மை குறைந்து, நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கும். அது மட்டும் அல்ல நீளமான மூங்கில் குழாயில் கணுக்கள் இருக்கக்கூடிய பகுதியில் வட்ட வடிவ தட்டுக்கள் போன்ற அமைப்பு இருக்கும். இது மேலும் மூங்கிலுக்கு உறுதி சேர்க்கும் பணியை செய்கிறது.
மூங்கிலின் அடியில் இருக்கக்கூடிய பகுதியில் அதிகளவு கணுக்கள் காணப்படுகிறது. மேலும் இது பக்கவாட்டில் அசையும் போது எந்த விதமான பாதிப்புகளையும் ஏற்படுத்தாத வகையில் அமைந்துள்ளது. இதுவும் மூங்கில் செடிக்கு மட்டுமே இருக்கக்கூடிய தனி சிறப்பாக கருதப்படுகிறது.
எனவே தான் மூங்கிலானது பலமாக இரும்பு கம்பிக்கு நிகராக உள்ளது. இதனுடைய நுண் இழைகள் எளிதில் சேதமாகாமல் இருப்பதற்கு தான் மேலே உரை போன்ற அமைப்பை இயற்கை இதற்கு பரிசாக தந்துள்ளது.
இந்த மூங்கில் பல வகைகளில் மனிதர்களுக்கு பயன்படுவது மிக நன்றாக தெரியும். எனினும் இதில் இருக்கக்கூடிய பொறியியல் சித்தாந்தங்களை நாம் உணர்ந்து கொள்வதின் மூலம் மூங்கில் பற்றிய சிறப்பான தகவல்கள் நமக்கு தெரிய வரும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.
இப்போது மூங்கிலுக்குள் புதைந்திருக்கும் பொறியியல் அம்சங்கள் என்னென்ன என்பது உங்களுக்கு விளக்கமாக தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.