அலற வைக்கும் அமலாக்கத்துறை! உண்மையில் யார் இவர்கள்? என்னென்னெ அதிகாரம் இருக்கிறது இவர்களுக்கு?
அரசியல்வாதிகளை ஓட, ஓட விரட்டக்கூடிய அஸ்திரமாக இந்த அமலாக்கத்துறை தற்போது செயல்பட்டு வருகிறது என்றால் அதை உண்மையில் பாராட்ட வேண்டும்.
ஆனால் இன்னும் சாமானிய மக்களில் இருந்து படித்து மேலாவிகளாக இருக்கும் நபர்களுக்கு கூட இந்த அமலாக்கத்துறை என்றால் என்ன? எப்போது ஏற்படுத்தப்பட்டது என்ற சந்தேகங்கள் மட்டுமல்லாமல் அவற்றைப் பற்றிய அறிவும் சற்று குறைவாகவே தான் காணப்படுகிறது.
இந்திய நிதி அமைச்சரகத்தின் கீழ் செயல்படக்கூடிய இந்த புலனாய்வு மற்றும் சட்ட அமலாக்க அமைப்பானது, இந்திய காவல் பணி அதிகாரிகள், வருமான வரி அதிகாரிகள், சுங்கம் மற்றும் கலால் வரித்துறை அதிகாரிகளை கொண்டு இயங்க கூடியது.
இந்த அமைப்பானது இந்திய அரசால் மே மாதம் 11 ஒன்றாம் தேதி 1956-ல் நிறுவப்பட்டது. இந்த அமலாக்கத் துறையை ஆங்கிலத்தில் ENFORCEMENT DIRECTORATE என்று அழைப்பார்கள்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள பொருளாதாரச் சட்டங்களை இந்த அமைப்பு தான் அமல்படுத்துகிறது. இதன் தலைமை இடம் டெல்லியில் உள்ளது. மேலும் நாடு முழுவதும் ஐந்து இடங்களில் கிளைகளைக் கொண்டு செயல்படுகிறது.
மேலும் இதற்கான கிளை சென்னையிலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த துறையின் மூலம் சட்ட விரோதமாக சேர்க்கப்பட்ட சொத்து அனைத்தும் முடக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் அதற்கான முக்கிய உத்தரவுகள் முடிவுகளை எடுக்கக்கூடிய அதிகாரம் இதற்கு உள்ளது. மேலும் இவை அனைத்தும் டெல்லியில் தீர்மானிக்கப்படும்.
இதில் சட்ட விரோதமாக பணப்பரிவத்தினை செய்யப்படக்கூடியவர்களுக்கு பண பரிவர்த்தனை சட்டம் 2002, அன்னிய செலாவணி மேலாண்மை சட்டம் 1999, தலைமறைவு பொருளாதார குற்றவாளிகளின் சட்டம் 2018, அந்நிய செலாவணி ஒழுங்குமுறை சட்டம் 1973, காபி போசா சட்டம் 1974 போன்ற சட்டங்கள் இதில் அடங்கும்.
அதுமட்டுமல்லாமல் இது போன்ற குற்றத்தில் ஈடுபடும் நபர்களுக்கு சமன் அனுப்புதலோடு மட்டுமல்லாமல் அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்தல் போன்ற பல்வேறு அதிகார வரம்புகளை தன்னகத்தைக் கொண்டிருப்பதால் தான் அரசியல்வாதிகள் அமலாக்குத்துறை என்றாலே அடிவயிறு கலங்கக்கூடிய வகையில் உள்ளது.
சட்ட விரோதமான முறையில் பண பரிமாற்றுச் சட்டத்தின் கீழ் நடந்த குற்றங்களை விசாரணை செய்யவும், கைது செய்யவும் இந்த அமைப்பிற்கு அதிகாரம் உள்ளது.
இப்போது உங்களுக்கு அமலாக்கத் துறை என்றால் என்ன? அதில் உள்ள சட்டங்கள் என்ன என்பது மிகச் சிறப்பான முறையில் புரிந்திருக்கும் என்று நம்புகிறோம்.