யானை குட்டியின் அளவில்லா பாசம் !!!
மனிதர்களைவிட விலங்குகள் மிகவும் பாசமானது என கேள்விப்பட்டிருக்கிறோம். இந்தக் கூற்றை உண்மையாக்கும் வகையில் கென்யாவில் ஒரு சுவாரசியமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கென்யாவில் பிறந்த குட்டி யானைகளை வளர்க்க உதவிய தலைமை காவலர் பெஞ்சமின் அவர்களை தான் வளர்த்த ஒரு குட்டி யானை மீண்டும் பார்க்க வந்துள்ளது, அவருக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது. அந்நாட்டின் Sheldrick Trust யானைகள் பிறந்தவுடன் அவற்றை வளர்க்க உதவும் ஒரு குழுவாகும். இந்த குழுவின் ஒரு தலைமைக் காவலரே பெஞ்சமின்.
இவர் பல யானைகளை குட்டியாக இருக்கும்போது வளர்த்து, பின் அதை காடுகளுக்கு அனுப்புவார். அதுபோல அவர் வளர்த்து அனுப்பிய ஒரு யானை மீண்டும் அவரிடம் வந்து அவரை பார்த்து அன்பு பரிமாறிக் கொண்டது அனைவரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த வீடியோவை Sheldrick Wildlife Trust தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ பார்ப்பவர்களுக்கு அன்பின் ஆழத்தை உணர்த்தும் வகையில் அமைந்திருந்தது. பாசம் என்பது மதங்களையும் இனங்களையும் கடந்தது என்பதை இந்த யானை நமக்கு புரிய வைத்துள்ளது.
பெஞ்சமினை பார்க்க வந்த பாசமுள்ள யானையின் Cute-ஆன வீடியோவை கீழுள்ள ட்விட்டர் பதிவில் காணுங்கள்.
இதுபோன்ற வீடியோக்களுக்கு Deep Talks தமிழுடன் இணைந்திருங்கள்.