மது அருந்தியவுடன் நமக்கு என்னவெல்லாம் ஆகும் ??
மது அருந்தி விட்டால் ஒரு மனிதன் தடுமாற்றம் இல்லாமல் நிலையாக இருப்பது கடினம். மதுவை அருந்தியவுடன் நமது உடலில் என்னென்ன மாற்றங்கள் எல்லாம் நடக்கும் என்பதைப் பற்றிய ஒரு விழிப்புணர்வு பதிவு தான் இது.
முதலில் மதுவை அருந்திய பின் அது சாதாரண குளிர்பானங்களை போலவோ, உணவுப்பொருட்களை போலவோ நமக்கு ஜீரணமாகாது. அதற்கு பதில் நாம் அருந்திய மதுவானது நமது ரத்த ஓட்டத்தில் கலந்துவிடும். இப்படி ரத்த ஓட்டத்தில் கலக்கும் மது முதலில் நமது மூளையை சென்றடையும்.
மூளையை தொடர்ந்து நுரையீரல் மற்றும் கல்லீரல் ஆகிய பாகங்களுக்கு அந்த மது சென்றடையும். நமது உடலில் மது கொண்டுவரும் மாற்றமானது நமது வயது, பாலினம், எடை ஆகியவற்றால் ஒவ்வொரு மனிதருக்கும் வேறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது. நீங்கள் மிகவும் எடை குறைவான மனிதராக இருந்தால் நீங்கள் அருந்தும் மது உங்கள் உடலில் மிக வேகமாக அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் எடை குறைவாக உள்ள மனிதர்களுக்கு tissue எனப்படும் உடலின் ஆக்க மூலப்பொருள் கம்மியாக இருக்குமாம்.
வயதானவர்களை விட குழந்தைகளையும், வயதில் சிறியவர்களாக இருப்பவர்களையும் மது அதிக அளவில் தாக்கும். குழந்தைகளின் மூளையானது குறிப்பிட்ட வயது வரை அதன் முழு வளர்ச்சியை எட்டியிருக்காது. அப்படி இருக்கும் பட்சத்தில் மது அருந்துவது மூளையை கடுமையாக பாதிக்கும்.
ஒருவேளை உங்களுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தால் உங்களுக்கு வயது கூட கூட நீங்கள் அருந்தும் மதுவின் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் இளமை காலங்களில் நீங்கள் உட்கொள்ளும் அளவான மதுவையே வயதான பின்பும் அருந்தினால் உங்களுக்கு பக்கவாதம், மாரடைப்பு, கேன்சர் போன்ற நோய்கள் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த உண்மையை அறிந்து படிப்படியாக மது அருந்தும் பழக்கத்தை குறைத்தும் தவிர்த்தும் வாழ கற்று கொள்வது நல்லது.
மதுவின் தாக்கம் உங்கள் பாலினத்தை பொருத்தும் மாறுபடும். ஆண்களைவிட பெண்களின் உடலில் மதுவின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஒரு ஆணும் பெண்ணும் ஒரே அளவிலான மதுவை உட்கொள்ளும்போது, மது அருந்திய பெண்ணின் உடலிலேயே அதன் வீரியம் அதிகமாக இருக்குமாம். மது அருந்திய பிறகு இருக்கும் போதை நிலையானது ஆண்களை விட பெண்களுக்கே நீண்ட நேரம் இருக்கும்.
மதுவின் போதையை முறியடிக்கும் enzyme எனப்படும் நொதியானது பெண்களின் உடம்பில் ஆண்களைவிட சற்று கம்மியாக இருக்குமாம். நீங்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் வாடிக்கையாக மது அருந்தும் பட்சத்தில் உங்கள் உடலில் படிப்படியாக பெரிய பெரிய மாற்றங்கள் வர ஆரம்பிக்கும்.
மனிதர்களின் உயிரையே குடிக்கக் கூடிய ஆற்றல் பெற்ற மதுவினால் சில நன்மைகளும் உண்டு. சரியான இடைவேளையில் குறிப்பிட்ட அளவு மது உட்கொண்டால் நமது வயிற்றை அது சுத்தப்படுத்தும். அதுவே அளவுக்கு மீறினால் நமக்கு பசியின்மை ஏற்பட்டு சத்துக் குறைபாடும் ஏற்படும்.
நாம் அருந்திய மது, நமது ரத்த ஓட்டத்தில் கலந்தபின் நம்மை அறியாமலேயே நமக்கு லேசான சிரிப்பு வருமாம். இதற்கு காரணம், மது அருந்திய பின் நமது தோல் பகுதியில் அதிக அளவில் ரத்த ஓட்டம் இருப்பதே. அதுமட்டுமின்றி நம் இரத்தத்தில் மது கலந்துள்ளதால் ரத்த அழுத்தமானது போதை நிலையில் கம்மி ஆகுமாம்.
நாம் அருந்திய மது நமது மூளையை சென்றடையும் போது தான் விளைவுகள் பயங்கரமாக இருக்கும். மது அருந்தியவர்களின் பேச்சில் ஒரு நிதானமற்ற தடுமாற்றத்தை நம்மால் பார்க்க முடியும். அதுமட்டுமின்றி மது அருந்து விட்டபின் நாம் காணும் காட்சிகள் எதுவும் தெளிவாக நமக்குத் தெரியாது. எந்த ஒரு விஷயத்தையும் கூர்ந்து உன்னிப்பாக நம்மால் கவனிக்கவும் முடியாது.
- அமேசான் நதி வறட்சி: உலகின் நுரையீரல் அழிந்துவிடுமா? பூமியின் எதிர்காலம் கேள்விக்குறி!
- சதுர வடிவ விண்கல்: ஹோபா எரிக்கல்லின் பின்னணியில் மறைந்திருக்கும் அறிவியல்!
- வாழ்க்கையின் கசப்பான உண்மைகள் – ஒரு சிங்கத்தின் கடைசி பாடம்
- தன்னம்பிக்கையே வெற்றியின் முதல் படி!
- பெருமிதத்துடன் பதிலளித்த ஆபிரகாம் லிங்கன்
உணவு அருந்திவிட்டு மது அருந்துவதற்கும், வெறும் வயிற்றில் மது அருந்துவதற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. நம் வயிற்றில் உணவு இல்லாதபோது மது அருந்தினால், நாம் அருந்திய அனைத்து மதுவும் நமது ரத்த ஓட்டத்தில் கலந்து அதன் தாக்கத்தை ஏற்படுத்தும்.
மது அருந்துவது வீட்டிற்கும், நாட்டிற்கும், உடலுக்கும் கேடு விளைவிக்கும் என்பதை பலமுறை நாம் கேட்டு இருந்தாலும் அதை மீண்டும் ஒருமுறை நினைவில் வைத்துக்கொண்டு இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.
இதுபோன்ற தகவல்களுக்கு deep talks தமிழுடன் இணைந்திருங்கள்.