வீடற்றவரை கட்டித்தழுவிய நாய் ! அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ் !
நாய்கள் மனிதனின் சிறந்த நண்பன் என்பது ஒரு பிரபலமான பழமொழி, இதை நிரூபிக்கும் ஒரு வீடியோ கிளிப் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பின்னர் அந்த பழமொழி முற்றிலும் உண்மையே என நம்மை நினைக்க வைக்கும்.
வீடற்ற ஒரு மனிதனை தெருவில் இருக்கும் ஒரு நாய் கட்டிப்பிடிக்கும் இந்த வீடியோவானது பார்ப்பவர்களின் மனதை உருக வைக்கிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அந்த நாயை புகழ்ந்தும் பாராட்டியும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
வைரல் ஆகியுள்ளது இந்த வீடியோவில் தெருக்களின் நடைபாதையில் ஒரு மனிதன் அமர்ந்திருப்பதைக் காணலாம். நாய் ஒன்று அவரை அணுகி அந்த அந்நியரை அரவணைத்து அவரை ஆறுதல்படுத்த தொடங்குகிறது. இச்சம்பவம் அந்த வீடற்ற மனிதனை ஆச்சரியப்படுத்துகிறது.
மேலும் அவர் நாய்க்குட்டியை மீண்டும் அணைத்துக் கொள்கிறார். வீடியோவின் இறுதி வரை இருவரும் ஒருவரை ஒருவர் தழுவிக் கொள்கின்றனர். அன்பு எனும் மூன்றெழுத்து இனங்களை தாண்டியும் பரவக்கூடிய ஒரு அழகான விஷயம் என்பதை இந்த வீடியோ பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.
சமீப காலங்களில் செல்லப்பிராணிகளின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வரும் நிலையில் அந்த பிராணிகளின் அன்பு எவ்வளவு விலாசம் ஆனது என்பதை உணர்த்தும் வகையிலான இதுபோன்ற வீடியோக்களும் நெட்டிசன்களால் கொண்டாடப்படுகிறது.
அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ் எனும் கூற்றை நிஜமாக்கும் அந்த அன்பு காட்டும் நாயின் வீடியோ அடங்கிய ட்விட்டர் பதிவை கீழே காணுங்கள்.
இதுபோன்ற தகவல்களுக்கு Deep Talks தமிழுடன் இணைந்திருங்கள்.