“வெற்றியைத் தரும் சுதர்சன சக்கரம்..!” – ரகசியம் உங்களுக்கு தெரியுமா?
காக்கும் கடவுளாக இந்து மதத்தில் சித்திரக்கப்பட்டிருக்கக் கூடிய மகாவிஷ்ணுவின் ஆயுதமான ஸ்ரீ சுதர்சன சக்கரம் எப்படி ஸ்ரீ கிருஷ்ணருக்கு கிடைத்தது என்ற ரகசியம் உங்களுக்கு தெரியுமா? தெரியாத பட்சத்தில் நீங்கள் முதலில் சுதர்சன சக்கரத்தின் பொருளை உணர்ந்து கொள்வது அவசியம் ஆகும்.
சுதர்சன சக்கரம் என்ற வார்த்தையில் சு மற்றும் தர்ஷன் என்ற இரண்டு வார்த்தைகள் உள்ளது. இதில் “சு” என்ற வார்த்தை “ச்ருஹு” என்ற வார்த்தையில் இருந்து உருவானது.இந்த சக்கரமானது தொடர்ந்து ஒரு நிலையான இயக்கத்தில் இருக்கும்.
இந்த சக்கரமானது படைக்கும் தொழிலை மேற்கொண்டிருக்கும் பிரம்மா மற்றும் காக்கும் தொழிலை செய்யும் விஷ்ணு, அழிக்கும் தொழிலை செய்யும் ஈசனின் ஒருங்கிணைந்த ஆற்றலால் உருவாக்கப்பட்டது.
பிரகஸ்பதி விஷ்ணுவுக்கு வழங்கப்பட்ட இந்த சுதர்சன சக்கரமானது தீமையை அளிக்கக்கூடிய சக்தி கொண்டது. சுதர்சன சக்கரமானது எதிரியை தாக்கி விட்டு பிறகு மீண்டும் அது இருந்த இடத்திற்கு திரும்பி விடும்.
சத்தமும் இல்லாமல் சம்பவம் பண்ணக்கூடிய இந்த சக்கரம் 6 ஆரங்களை கொண்டது. இதன் மையப் பகுதி வஜ்ரவால் ஆனது என்று கூறப்படுகிறது. மேலும் இந்த ஆரங்களில் “சஹஸ்ரத் ஹம் பட்” என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரிக் வேதத்தில் இது சுமார் 12 ஆரங்கள் கொண்டு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. மேலும் 6 தொப்புள்களையும் உடையது என்று கூறுகிறார்கள். இந்த 12 ஆரங்களும் சந்திர நாட்காட்டியின் 12 மாதங்களையும் 12 தெய்வங்களையும் குறிப்பதாக கூறுவதோடு ஆறு தொப்புள்கள் ஆறு வகையான பருவங்களை உணர்த்துவதாக தெரிகிறது.
மேலும் திருமாலின் கையில் இருக்கக்கூடிய இந்த சுதர்சன சக்கரத்தின் சுழல் வேகம் 30 கிலோமீட்டர்/ வினாடி என்று துல்லியமாக கூறியிருக்கிறார்கள்.
இந்த பூமியின் சுருக்கமே வட்ட வடிவம் தான். சூட்சும ரகசியம் வட்டத்தை அடிப்படையாகக் கொண்டதுதான். எல்லா ஆயுதங்களை காட்டிலும் அதிக சக்தியோடு சுழலக்கூடிய தன்மையில் இந்த சுதர்சன சக்கரம் உள்ளது.
எதிரில் சுதர்சன சக்கரம் செல்லுவதில் தடை ஏற்பட்டால் சக்கரத்தின் வேகம் அதிகரிக்கும். சுழலும் போது சத்தம் ஏற்படாமல் இருக்கும். துளசி தளத்தில் அடங்கி விடக் கூடிய எந்த சுதர்சன சக்கரம் இந்த பிரபஞ்சம் அளவு பறந்து விரிந்தது.
அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்ட இந்த சுதர்சன சக்கரம் உதவுவதால் தான் வாழ்க்கையை ஒரு வட்டம் என்று வர்ணித்து இருக்கிறார்கள்.