“கூகுளை ஓவர் டேக் செய்யும் இந்திய நிறுவனம்..!” எதில் தெரியுமா?
கூகுள் நிறுவனத்திற்கு சவால் விடக்கூடிய வகையில் கூகுள் மேப்புக்கு போட்டியாக இந்திய கம்பெனி மேப் மை இந்தியா என்ற டிஜிட்டல் மேப் டேட்டா பேஸை உருவாக்கி இருக்கிறார்கள்.
இதனை உருவாக்கியவர்கள் அமெரிக்காவில் செய்த வேலையை வேண்டாம் என்று கூறிவிட்டு வந்த ராகேஷ் மற்றும் ராஷ்மி வர்மா. இவர்கள் தங்கள் தாய் நாடான இந்தியாவிற்கு திரும்பிய பிறகு ஜியோகிராபிகல் மேப் பிரிட்டிஷ் காலத்துக்குப் பின்பு அப்டேட் செய்யவில்லை என்பதை உணர்ந்து கொண்டு இந்திய அரசாங்கத்தை டேட்டாவுக்காக தொடர்பு கொண்டார்கள்.
எனினும் ஆரம்ப காலகட்டத்தில் இவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை.எனினும் தொடர்ந்து அணுகியதை அடுத்து இவர்களது எண்ணம் ஈடேறியது என்று கூறலாம். இதனைத் தொடர்ந்து இவர்கள் டாப் டவுன் என்று சொல்லப்படக்கூடிய பேப்பர் மேப்புகளை டிஜிட்டலைஸ் செய்தார்கள்.
மேலும் அதிக அளவு மேப்களை பெறுவதற்காக குழுவாக செயல்பட்ட இவர்கள் இருவரும் நாட்டின் ஒரு சின்ன தெருவை கூட விடாமல் சர்வே செய்தார்கள். 25 ஆண்டுகள் தொடர்ந்து மேற்கொண்ட உழைப்பு, ஆய்வு மூலம் 400 சர்வேயர்களை வைத்து இவர்கள் வேலை செய்து இரண்டு கோடி டேட்டா பாய்ன்டுகளை தற்போது கைவசம் கொண்டிருக்கிறார்கள்.
இதில் 3d டேட்டா விசுவலைசேஷன், டெலி மேடிக்ஸ், நேவிகேஷன் சிஸ்டம் முதலியவை அடங்கும். இவர்களது பயணத்தில் கோக்ககோலா கூட்டு சேர்ந்து கொண்டது. பிறகு ஹிந்துஸ்தான் லீவர், இந்திய ராணுவ சேவைகள் என வாடிக்கையாளர்களை விரிவுபடுத்திக் கொண்டார்கள்.
மேலும் தங்களது கம்பெனிகளின் டேட்டா தரத்தை அதிகரித்த இவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட கம்பெனிகளோடு கூட்டணி சேர்ந்து மார்க்கெட்டிங் நிறுவனங்களின் மூலம் டேட்டாக்களை விரைவாக பெற்றார்கள்.
இப்போது மிக சீறிய முறையில் வளர்ந்திருக்கும் இந்த கம்பெனி ஆனது கடந்த நிதியாண்டில் 282 கோடி வருவாயை எட்டியுள்ளது. இதில் வட்டி போக 108 கோடி ரூபாய் லாபம் ஈட்டி உள்ளது. இதனை அடுத்து இந்த இந்திய நிறுவனமான மேப் மை இந்தியா, டொனால்ட், ஆப்பிள், அமேசான் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான நாட்டின் சர்வீஸில் தற்போது களம் இறங்கி உள்ளது.
நீங்களும் கூகுள் மேப்புக்கு பதிலாக இந்த மேப் மை இந்தியா மேப்பை பயன்படுத்தி பாருங்கள் கட்டாயம் இதன் சிறப்பம்சம் உங்களுக்கு செல்ல தெளிவாக புரியும்.