“விஜயநகர பேரரசின் மதுகிரி கோட்டை..!” – ஆசியாவின் அதிசய மிகப்பெரிய ஒற்றைகல் பாறை..
இன்று வரை பிரம்மாண்டமாக காட்சியளிக்க கூடிய மதுகிரி கோட்டையில் தான், ஆசியாவின் மிகப்பெரிய ஒற்றைகல் பாறை உள்ளது. இந்த கோட்டையானது கர்நாடகாவில் இருக்கும் தும்குர் மாவட்டத்தில் உள்ளது.
அந்தக் காலத்தில் எதிரிகளிடமிருந்து தங்களை 100% பாதுகாக்க கூடிய பாதுகாப்பு மிக்க திகிலூட்டும் கோட்டையாக இது விளங்கி உள்ளது. தும்குர் மாநிலத்தின் அடையாளமாக விளங்கும். இந்த கோட்டை பற்றிய விவரங்களை இனி இக்கட்டுரையில் காணலாம்.
இந்தக் கோட்டையானது 3930 அடி உயரத்துக்கு மேல் கம்பீரமாக நிமிர்ந்து இருக்கும். மதுரகிரி மலைகோட்டை தான் ஆசிரியவிலேயே மிகப்பெரிய ஒற்றை கல் பாறையாக கருதப்படுகிறது.
இந்தக் கோட்டையானது 17ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசு மன்னரான ஹிரே கௌடாவால் கட்டப்பட்டது. இவர்களை அடுத்து இந்த பிரம்மாண்டமான கோட்டையை 18 ஆம் நூற்றாண்டில் ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் போன்றவர்கள் கைப்பற்றி கோட்டைக்கு மேலும் வலிமை சேர்த்தார்கள்.
இந்த நிலையில் 1791 ஆம் ஆண்டு மைசூர் படைக்கும், பிரிட்டன் படைக்கும் நடந்த போரினை அடுத்து இந்த கோட்டையானது பிரிட்டிஷாரின் வசம் சென்றது. எனினும் ஆங்கிலேயர்கள் இந்த கோட்டையை பிடிப்பதில் பல சவால்கள் ஏற்பட்டதோடு மிக உறுதியான கோட்டையாக இது திகழ்ந்தது.
இந்தக் கோட்டை முழுவதும் கிரானைட் கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் நுழைவாயில்கள், சுவர்கள், கோட்டைகள், காவல் கோபுரங்கள் என பல கட்டமைப்பு பாதுகாப்புகள் உள்ளது.
மேலும் இந்த கோட்டையில் ஏழு சுற்று சுவர் செங்குத்தான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் வாசலை தித்திபாகிலு அல்லது நரகத்தி வாசல் என்று அழைக்கிறார்கள். செங்குத்தான முறையில் அமைக்கப்பட்டுள்ள சுவர்களில் எதிரிகள் ஏறுவது என்பது சிம்ம சொப்பனமாக இருந்து உள்ளது.
அதுபோலவே ஆபத்தான காலகட்டங்களில் இங்கு இருக்கக்கூடிய ராணுவ நுழைவாயில் இருந்து வீரர்கள் தப்பி நுழைவதற்கான நுழைவு வாயிலை அன்றே ஏற்படுத்திய பெருமை நம் முன்னோர்களுக்கு உள்ளது என்று கூறலாம்.
இந்த மதுகிரி மலைக்கோட்டையில் மலையேற்றம் மிக சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. சுற்றுலா பயணிகள் இதனை மிகவும் விரும்பி செய்கிறார்கள். குறைந்தபட்சம் இரண்டு முதல் மூன்று மணி நேரம் 3.5 கிலோமீட்டர் தொலைவு நாம் மலையேற்றம் செய்ய வேண்டி இருக்கும்.
அப்படி நீங்கள் இந்த மலையில் ஏறும் போது சுற்றிலும் உள்ள மலைகள் மற்றும் கிராமங்களை பார்த்து ரசிக்க முடியும்.