“கோவையில் வேற லெவல் திருவள்ளுவர் சிலை..!” – விவரம் தெரியுமா?
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவையில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது அந்த வகையில் தற்போது கோவைக்கு பெருமை சேர்க்கக்கூடிய வகையில் வேறு லெவல் திட்டம் ஒன்று செயல் ஆக்கப்பட்டு வருவது உங்களுக்கு தெரியுமா..
அந்தத் திட்டம் தான் கொங்கு தமிழ் பேசும் கோவை மாவட்டத்தில் அப்பன் திருவள்ளுவருக்கு என்று ஒரு அற்புதமான சிலை நிறுவபட்டுள்ளது. இந்த சிலையானது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டிருப்பது கோவை மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என கூறலாம்.
இந்த சிலையின் சிறப்பு என்னவென்றால் திருவள்ளுவர் எழுதிய 1330 திருக்குறளை போற்றக்கூடிய வகையில் தமிழில் இருக்கக்கூடிய 1330 எழுத்துக்களை தாங்கிய வண்ணம் இந்த சிற்பம் உள்ளது.
சுமார் 50 கோடி ரூபாய் செலவில் குறுச்சிகுளம் பகுதியில் இருக்கும் பழமையான ஏரிகள் சீரமைக்கப்பட்டு தமிழர் கலாச்சாரம் மற்றும் பண்டிகைகளை பிரதிபலிக்க கூடிய சிற்பங்களைக் கொண்டு அழகு படுத்தி இருக்கிறார்கள்.
மேலும் இங்கு அமைக்கப்பட்டிருக்கும் நடை பாதை பலரையும் கவர்ந்துள்ளது மாலை நேரத்தில் குழந்தைகளோடு குடும்பத்தினர் வந்து விளையாட ஏற்ற வகையில் பூங்கா போல மாற்றப்பட்டுள்ளது.
அங்குதான் இந்த அற்புத சிலையானது வைக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றிய அதிகாரப்பூர்வமாக தகவல் விரைவில் வெளிவரும். இச்சூழ்நிலையில் எந்த சிலை எப்போது திறக்கப்படும் என்று பொதுமக்களால் ஆவலோடு எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சிலையானது 2.5 டன் எடையில் உருவாக்கப்பட்டு இருப்பது தான் இதன் தனி சிறப்பு என்று கூறலாம் இதுவரை எங்குமே இல்லாத அளவு தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்டு இருக்கும் எந்த திருவள்ளுவர் சிலை கோவை மாவட்டத்திற்கு மேலும் ஒரு சிறப்பை ஏற்படுத்தி தரும் சிலை என்றும் சொல்லலாம்.
ஒரு முறையாய் போற்றப்படக்கூடிய திருக்குறளை இயற்றிய திருவள்ளுவருக்கு மிகச் சிறப்பான முறையில் கன்னியாகுமரியில் மிகப்பெரிய சிலையை நிறுவி இருக்கிறார்கள். அதனை அடுத்து தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட திருவள்ளுவரின் சிலை கோவையை அலங்கரிக்க உள்ளது.