வியக்க வைக்கும் சாக்லேட் மற்றும் ஸ்ட்ராபெர்ரி சமோசாக்கள் !!!
உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் பல்வேறு வகையான உணவு பழக்கங்கள் இருந்து வருகிறது. வியப்பூட்டும் பல தின்பண்டங்களை பற்றிய வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் சமீப காலங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
ஸ்ட்ராபெர்ரி மற்றும் சாக்லேட் flavor உள்ள சமோசாக்கள் தற்போது பெரிய பேசு பொருளாக மாறியிருக்கிறது. இப்படியெல்லாம் உணவு வகைகள் இருக்குமா ?? என்ற சந்தேகத்தை இந்த சாக்லேட் மற்றும் ஸ்ட்ராபெர்ரி சமோசாக்கள் நமக்கு ஏற்படுத்துகிறது. இந்த சமோசாக்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சாதாரணமான சமோசாவின் மேல் சாக்லேட் பொருத்தப்பட்டு பார்ப்பதற்கே ஒரு முக்கோண சாக்லேட் போல இந்த Chocolate சமோசா காட்சியளிக்கிறது. இந்த சமோசாவை குறித்த பல்வேறு கருத்துக்களை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
சாக்லேட் சமோசா மட்டுமின்றி ஸ்ட்ராபெர்ரி சமோசா பார்ப்பதற்கே Pink நிறத்தில் இருக்கிறது. இரண்டு முரணான சுவைகள் அடங்கிய சமோசாவும் சாக்லேட்டும் எப்படி இணைந்து ஒரு புதுவகையான சமோசாவை உருவாக்கியிருக்க முடியும் என்ற சந்தேகம் இந்த வீடியோவை பார்க்கும் போது எழுகிறது.
இந்த வீடியோவை பிரபல தொழிலதிபர் Harsh Goenka தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் சமீபத்தில் பெரிய பேசுபொருளாக இருந்த குல்பி இட்லியை விட இது சற்று வித்தியாசமானது என குறிப்பிட்டுள்ளார்.
ஹர்ஷ் கோயங்கா வெளியிட்ட ட்விட்டர் பதிவை கீழே காணுங்கள்.
இது போன்ற தகவல்களுக்கு Deep Talks தமிழுடன் இணைந்திருங்கள்.