“மே மாதம் பிறந்தவர்கள் பற்றிய ஆச்சரியமான தகவல்கள்..!”- இம்புட்டு இருக்கா..
ஒவ்வொரு மாதம் பிறந்தவர்களுக்கும் ஒரு தனிப்பட்ட குணம் இருக்கும். அந்த வகையில் மே மாதத்தில் பிறந்தவர்கள் எப்போதுமே கொஞ்சம் ஸ்பெஷல் தான். ஏனென்றால் இந்த மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் மற்ற மாதத்தில் பிறக்கும் குழந்தைகளின் எடையை விட 100 முதல் 200 கிராம் அதிகமாக இருப்பார்கள்.
மே மாதம் பிறந்த குழந்தைகளுக்கும் அவர்களின் வாழ்க்கை முறை மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கும். யாருக்காகவும்,எதற்காகவும் இவர்கள் எதையும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். மே மாதத்தில் பிறந்தவர்களுக்கு சில தனிப்பட்ட குணங்கள் இருக்கும்.
அது நல்லதாகவும் இருக்கும். கெட்டதாகவும் இருக்கும். ஏனெனில் குறை இல்லாத மனிதனே இருக்க வாய்ப்பில்லை.இனி இந்த மாதத்தில் பிறந்தவர்கள் நல்ல மற்றும் கெட்ட குணங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
தோல்வி மற்றும் கடினமான நேரங்களில் இவர்கள் வாழ்க்கையில் சோதனைகள் ஏற்படும். தன்னம்பிக்கை இவர்களுக்கு பிறக்கும் போதே கூடப் பிறந்த ஒன்றாகும். கடினமான சூழ்நிலைகளில் ஒரு அழுத்தம் தேவைப்படும் போது அவர்கள் அதனை மற்றவர்கள் கொடுக்கவேண்டும் என்று காத்திருக்க மாட்டார்கள்.
அவர்கள் உழைத்துக் கொண்டே முன்னேறி வருவார்கள்.மேலும் மற்றவர்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும். இவர்களை அனைவருக்கும் பிடிக்கும். இது தான் இவர்களின் பலம். இவர்கள் இருக்கும் இடங்களில் பெரும்பாலும் இவர்கள் தான் மையமாக இருப்பார்கள்.
உண்மையில் அனைவரது விருப்பத்தையும் இவர்கள் மனதுக்குள் ரசிப்பார்கள். வாழ்க்கையின் உயரத்தை அடைவது பற்றி கனவு கொண்டிருப்பார்கள். அவர்களின் செயல்கள் எப்போதும் எதார்த்தத்தை ஒத்ததாகவே இருக்கும்.
குருட்டுத்தனமான முடிவுகளை காணமாட்டார்கள். அடைய முடியாத குறிக்கோள்களைக் அலட்சியமாக கொள்வார்கள்.மேலும் மிகவும் கம்பீரமாக அவர்கள் அதற்கு ஏற்றவாறு பணத்தை செலவழிப்பதை வழக்கமாக கொண்டிருப்பார்கள்.
சில சமயம் சமாளிக்கக் கூடிய அளவுக்கு செலவழித்தாலும், பல நேரங்களில் அளவுக்கு அதிகமாக செலவழித்து அதிக சுமையை ஏற்றிக் கொள்வார்கள். இதனால் திட்டமிடுதலை இவர்கள் கில்லாடிகளாக இருப்பார்கள்.
இவர்களின் அணுகுமுறைகள் மிகவும் கடுமையானதாக இருக்கும். பிடிவாதம் மற்றும் அணுகுமுறையில் மேன்மை இருக்காது. இது போன்ற சந்தர்ப்பத்தில் இவர்களை சமாதானப்படுத்துவது என்பது மிகவும் கடினமான ஒன்று.
எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். இவர்கள் மற்றவர்கள் முன் அழுவதை எப்போதும் பார்க்க இயலாது. ஏனென்றால் இவர்களுக்கு எங்கிருந்து கண்ணீரை மறக்க வேண்டும் என்பது நன்கு தெரியும்.
இவர்கள் பெரும்பாலான காரியங்களை இதயத்திலிருந்து செய்வார்கள். கடினமான உழைப்பாளிகள் ஆக இருப்பார்கள். நினைத்த லட்சியத்தை அடைந்தே தீருவார்கள். ஆசையும், கனவும் மட்டுமின்றி அதை அடைவதற்கான முயற்சியும் உழைப்பும் இவர்களிடம் உண்டு.
சிலசமயம் உலகையே மறந்து கூட இவர்கள் தயாராக இருப்பார்கள். மே மாதம் பிறந்தவர்கள் ஓய்வில்லாத உழைப்பாளிகள் ஆனால் அவர்களுக்கு ஆற்றல் எப்போதுமிருக்கும். கடுமையாக கோபப்படுவார்கள் இதுவே இவரது மோசமான குணங்களில் ஒன்று என்று கூட கூறலாம்.
1 Comment
ஐயோ அப்படியே என்வாழ்க்கையில் உள்ளதுபோல் உள்ளது,நானும் மே மாதம்தான்…
Comments are closed.