• September 8, 2024

“நிலவில் சாதிக்க போகும் சந்திரயான் மூன்று..! – சாதித்த இஸ்ரோ..

 “நிலவில் சாதிக்க போகும் சந்திரயான் மூன்று..! – சாதித்த இஸ்ரோ..

chandrayaan-3

இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையத்தில் பல்வேறு வகையான சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளது என்பது அனைவருக்கும் தெரியும்.

 

அந்த வகையில் ஜூலை 14ஆம் தேதி 2023 வெள்ளிக்கிழமை, மதியம் 2.35 மணிக்கு சந்திரயான் – 3 விண்கலத்தை எல்விஎம் 3 எம் 4 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.

 

மேலும் சந்திரயான் 3 விண்கலம் துல்லியமான சுற்றுபட்ட பாதையில் நிலை நிறுத்தி உள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் இந்த வெற்றிக்காக இஸ்ரோ குழுவினர் அனைவருக்கும், பாராட்டுகளை தெரிவித்தார்.

chandrayaan-3
chandrayaan-3

இந்த சந்திரயான் மூன்று இந்திய விண்வெளி வரலாற்றில் ஒரு புதிய மைல் கல்லாக இருக்கும், என்பதோடு மட்டுமல்லாமல் பல விதமான  விண்வெளி விஷயங்கள் நமக்கு இதன் மூலம் தெரியவரும். 

 

அதுமட்டுமல்லாமல் நிலவுக்கு நமது பயணம் தற்போது முதல் துவங்கப்பட்டு விட்டது என்று மகிழ்ச்சியோடு தெரிவித்து இருக்கிறார். இந்நிலையில் இஸ்ரோவின் பெங்களூர் கண்காணிப்பு மையத்திலிருந்து விண்கலத்தை தற்போது கூர்ந்து கவனித்து வருகிறார்கள்.

 

சந்திரயான் ஒன்று நிலவின் மேற்பரப்பில் செய்த ஆய்வுகளின் மூலம் பலவிதமான தகவல்கள் நமக்கு கிடைத்தது.

chandrayaan-3
chandrayaan-3

மேலும் நிலவில் நீர் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி அன்று இஸ்ரோ அறிவித்தது. இதனை அடுத்து நிலவு பற்றிய மிகப்பெரிய ஆராய்ச்சி பணிகளை துவங்கியது.

1969 ஆம் ஆண்டிலேயே அமெரிக்கா தனது விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பி அங்கு இருக்கக்கூடிய பாறைகளின் மாதிரிகளை கொண்டு வந்து ஆய்வுகளை மேற்கொண்ட போதும் நிலவில் நீர் இருப்பதை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

chandrayaan-3
chandrayaan-3

அதுபோலவே 1972 வரை நாசா 12 வீரர்களை நிலவுக்கு அனுப்பியது. அவர்களாலும் நிலவில் நீர் இருப்பதற்கான ஆதாரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் இந்தியர்கள் அனுப்பிய சந்திரயான் 1 என்ற இஸ்ரோ ஏவிய அந்த சாதனம் அளப்பரிய சாதனையை படைத்தது. அது போலவே சந்திரயான் இரண்டு திட்டத்திலும் நமக்கு வெற்றி கிடைத்தது.

 

இதனை அடுத்து சந்திரயான் மூன்று ஏவப்பட்டு உள்ள நிலையில் நமக்கு மேலும் பல முக்கியமான தகவல்களை இது பெற்று தரும் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை. இதனை அடுத்து உலக அளவில் இந்தியாவிற்கு விண்வெளி ஆய்வில் ஒரு மிகப்பெரிய இடம் கிடைத்துள்ளது என்று கூறலாம்.