“நீலத்திமிங்கலத்திற்கு போட்டியாக களம் இறங்கிய பெருசெட்டஸ் கொலோசஸ்” (Perucetus Colossus) – விஞ்ஞானிகள் என்ன சொன்னாங்க?
இந்த பூமியில் மிகத் பெரிய உயிரினமாக யானை உள்ளது என்று கூறுவீர்கள். அதற்கு அடுத்ததாக கடலில் வாழக்கூடிய உயிரினம் எது என்று பார்க்கும்போது நீங்கள் நீலத் திமிங்கலம் என்று சட்டென கூறி விடுவீர்கள்.
இதில் இப்போது ஒரு ஆச்சரியத்தக்க உண்மை வெளிவந்துள்ளது. இதுவரை பூமியில் வாழ்ந்த உயிரினங்களிலேயே மிகப் பெரிய உருவ அமைப்பை கொண்டிருந்த பழங்கால உயிரினம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
இந்த திமிங்கலம் ஆனது பெரு நாட்டின் தென் பகுதியில் உள்ள ஒரு பாலைவனத்தில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திமிங்கலமானது நீண்ட காலத்திற்கு முன்பே அழிந்து போனதாக கருதப்படுகிறது. இந்த திமிங்கலத்தின் எடை சுமார் 3 லட்சம் கிலோவாக இருக்கும் என தற்போது மதிப்பிட்டு இருக்கிறார்கள்.
புதை படிவமாக இருந்த இந்த திமிங்கலத்திற்கு பெருசெட்டஸ் கொலோசஸ் (Perucetus Colossus) பெயரிட்டு இருக்கிறார்கள். இதனை அடுத்து நீல திமிங்கலங்களை விட அதிக அளவு உயரம் மற்றும் எடை கொண்ட திமிங்கலமாக இது இருக்கும் என தெரியவந்துள்ளது.
மேலும் இந்த திமிங்கலம் வாழ்ந்த ஆண்டுகளை கணக்கிட்டு பார்த்தபோது, அது சுமார் 4 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்கலாம் என கூறுவதோடு மட்டுமல்லாமல் அதனுடைய புதைப்படிவ எலும்புகள் எவ்வளவு காலத்துக்கு முற்பட்டது என்பதை ஆய்வு செய்து தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த புதை படிம எலும்புகள் 13 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், இந்த எலும்புகள் அதிக எடை கொண்டிருந்த காரணத்தினால் பெருநாட்டின் தலைநகரான லிமாவுக்கு கொண்டு வரவே மூன்று ஆண்டுகள் ஆனது.
இதனை அடுத்து ஆய்வுகளை மேற்கொண்ட டாக்டர் மரியா உர்பினா தலைமையிலான கண்டுபிடிப்பு குழுவில் பணிபுரிந்த டாக்டர் எலி ஏம்சன், பழங்கால திமிங்கலம் பற்றிய தகவல்களை வெளியிட்டார்.
இவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் 13 முதுகெலும்புகள் 4 நெஞ்சு எலும்புகள் மற்றும் ஒரு இடுப்பு எலும்பு என 18 எலும்புகள் கிடைத்துள்ளது. துண்டு துண்டாக கிடைத்திருக்கும் இந்த எலும்புகளை கொண்டு அவற்றின் வயதை இவர்கள் கணக்கிட்டு இருக்கிறார்கள். மேலும் விஞ்ஞானிகள் எந்த உயிரினத்தை அதிகளவு புரிந்து கொள்ள இது உதவியது.
மேலும் அவர்கள் ஆய்வுகள் மேற்கொண்ட எலும்புகளில் அடர்த்தி மிகவும் அதிகமாக இருந்ததாகவும், உள்ளுக்குள் இயற்கையாக நடக்கும் ஆஸ்டியோஸ்கிளிரோசிஸ் எனப்படும் செயல்முறையின் மூலம் எலும்பில் அதிகளவு துளைகள் இருந்ததாகவும், வெளிப்புற அமைப்பு கூடுதல் வளர்ச்சியோடு இருந்ததாகவும், இதனை பேச்சியோஸ்டோசிஸ் என அழைக்கிறார்கள்.
இதனை அடுத்து இந்த திமிரங்கத்தின் நீளம் சுமார் 17 முதல் 20 மீட்டர் வரை இருக்கும் என அவர்கள் கணித்திருக்கிறார்கள். எலும்பின் எடை மட்டும் ஐந்து புள்ளி மூன்று முதல் ஏழு புள்ளி ஆறு டன்கள் வரை இருக்கலாம் என கருதப்படுகிறது. 3 லட்சத்தில் இருபதாயிரம் கிலோ வரை இருக்கும் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
மேலும் இந்த பழங்கால திமிங்கிலமானது, தற்போது இருக்கும் நீலத்திமிங்கலங்கள் வாழக்கூடிய பகுதியில் மட்டுமே வாழ்ந்து இருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.
இதனை அடுத்து பழங்காலத்தில் வாழ்ந்த மிகப்பெரிய பெருசெட்டஸ் கொலோசஸ் திமிங்கலம் தான், நீலத்திமிங்கலத்திற்கு போட்டியாக மிகப்பெரிய அளவு உருவத்தில் இருந்திருக்கும் என கூறலாம்.