மருதாணி வைக்கும் சடங்கு தமிழர்கள் ஏற்படுத்தியதின் ரகசியம் என்ன?
மங்களகரமான பொருளாக கருதப்படும் மருதாணியை பெண் பிள்ளைகளுக்கு அதிக அளவு சூட்டி மகிழ்ந்திருக்கிறார்கள். குறிப்பாக சடங்குகள், சம்பிரதாயங்கள், விசேஷ நாட்களில் இதுபோன்று பெண்களுக்கு மருதாணியை வைத்ததின் ரகசியம் என்ன என்று தெரியுமா?
மருதாணியை வைக்கும் போது கைகள் சிவப்பாக மாறுவதால் பார்க்க அழகாக இருக்கும் என்ற எண்ணத்தில் இந்த மருதாணியை பெண் பிள்ளைகளுக்கு சூட்டி மகிழவில்லை. அதில் நம் முன்னோர்களின் அறிவு புதைந்து கிடக்கிறது.
அட .. அப்படி என்ன இருக்கிறது என்று நீங்கள் உங்களுக்குள் யூகிப்பது எங்களுக்கு தெரிகிறது. பொதுவாக பெண் குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட பருவத்தை அடைந்தவுடன் பூப்பெய்துவது வழக்கமான ஒன்று. பூப்பெய்திய பெண்கள் மாதவிடாய் காலத்தில் வெளிவரும் இரத்தப்போக்கை பார்த்து பயந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் சிவப்பு நிறத்தை கைகளிலும், கால்களிலும் ஏற்படுத்தக் கூடிய மருதாணியை இட்டு அவர்களின் மன நிலையை மாற்றி இருக்கிறார்கள்.
இந்த விஷயம் தெரியாமலேயே முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள் என்று மருதாணியை பெண் பிள்ளைகளின் கைகளிலும், கால்களிலும் இடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பதோடு திருமண நிகழ்வில் ஒரு சடங்காகவும் கொண்டிருக்கிறோம்.
மாதவிடாய் போக்கில் ஏற்படும் அதீத ரத்த இழப்பை பார்த்து அவர்கள் கலங்கி விடக் கூடாது, மனதளவில் உறுதியோடு இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இது போன்ற விஷயங்களை புகுத்தி இருக்கிறார்கள். உளவியல் ரீதியாக பெண்களின் மனதை பக்குவப்படுத்த இந்த நிகழ்வு உண்மையில் பயன்படும்.
இதனைப் புரிந்து கொள்ள முடியாத பகுத்தறிவாதிகள் இந்த சடங்குகளை குறை சொல்வதும், மருதாணி வைக்க வேண்டாம் என்று பல விதமான கருத்துக்களையும் தெரிவித்து வருவது தவறாகும்.
மூடநம்பிக்கை என்று இது போன்ற சடங்குகளை நாம் செய்யாமல் விட்டால், அதனுள் ஒளிந்திருக்கும் உண்மையான ரகசியம் என்ன என்று உங்களுக்கு புரியும் போது கட்டாயம் நீங்கள் மீண்டும் நம்பிக்கையோடு அந்த சம்பிரதாயங்களை கடைபிடிப்பீர்கள்.
மேலும் மருதாணியில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இந்த மருதாணியை நீங்கள் உங்கள் கைகளில் வைக்கும் போது அது மிகச்சிறந்த கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது. இது கண்ணுக்கு புலப்படாத கிருமிகளை அழிக்கக்கூடிய சக்தி படைத்தது.மேலும் உடல் வெப்பத்தை தடுக்கும் ஆற்றல் கொண்டது.
எனவே இத்தகைய சிறப்புமிக்க மருதாணியை உங்கள் பெண் பிள்ளைகளுக்கு சூட்ட மறந்து விடாதீர்கள்.
1 Comment
Very nice explanation tq
Comments are closed.