“தமிழர்கள் கலாச்சாரத்தில் வாழையின் பங்கு” – விஞ்ஞானிகளை மிஞ்சும் மூளை..
தமிழ் மக்களின் கலாச்சாரத்தில் பின்னிப் பிணையப்பட்டிருக்கும் வாழைமரம், சுப காரியங்களில் அதிக அளவு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக தமிழர்கள் மரபில் வாழை மரத்திற்கு என்று ஒரு தனி இடம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மரத்தை வீடுகளிலும், பண்டிகை காலங்களிலும், குடும்ப நிகழ்ச்சிகளிலும் வீட்டின் முன்னால் கட்டி வருவதை இன்றும் தொடர்ந்து வருகிறோம்.
வாழையடி வாழையாக வம்சம் தழைக்கவும், குடும்பத்தில் மட்டுமல்லாமல் எல்லா பகுதிகளிலும் மகிழ்ச்சி நிலவும் இந்த வாழை மரத்தை வீட்டின் முற்றத்தில் கட்டி மகிழ்கிறோம்.
தமிழர் மரபில் மகிழ்ச்சியின் அடையாளமாக விளங்கக்கூடிய, இந்த வாழைமரம் மனிதர்களுக்கு இடையே ஏற்படுகின்ற எதிர்மறை ஆற்றலை தடை செய்யும் என்பதால் தான் அதனை விசேஷ காலங்களில் வீட்டின் முன்னால் கட்டி வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம்.
வாழைமரம் எப்படி தனது வாழ்நாளில் குலையைத் தள்ளி அதனுடைய வாழ்க்கையை பூர்த்தி செய்கிறது. மேலும் அதன் கீழே பல கன்றுகள் தோன்றுவதைப் போல ஒருவரது குடும்பம் தழைக்க வாழைமரம் கட்டப்படுகிறது என்று பெரியவர்கள் கூறி இருக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் வாழை மரத்தில் இருக்கக்கூடிய இலைகளில் இருக்கின்ற பச்சையம் மற்றும் ஈரப்பதம் வீட்டுக்கு முன்னால் நிலவும் வெப்பத்தை கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டது. அது மட்டுமா? விசேஷ வீடுகளில் எவருக்காவது விஷ பூச்சிகள் கடித்துவிட்டால் அவர்களுக்கு முதல் உதவி செய்ய விஷ முறிவாக இந்த வாழை பயன்படுகிறது.
முக்கனிகளில் ஒன்றாக திகழக்கூடிய இந்த வாழை அதிக அளவு மக்கள் கூடும் பகுதிகளில் குறிப்பாக திருமணம், திருவிழா, மங்கல நிகழ்வுகள் மற்றும் மரண சடங்குகளில் முதன்மை இடத்தை பிடிக்கும். அதிகமாக மக்கள் கூடும் பகுதிகளில் கரியமல வாயு அதிக அளவு வெளியேறும் அதைக் குறைக்கவும் ஆக்ஸிஜனின் அளவை அதிகரிக்கவும் சம்பிரதாயம் என்ற பெயரில் விஞ்ஞானத்தை புகுத்தியவர்கள் நமது முன்னோர்கள்.
அதிலும் குரு தோலை மிகச் சிறப்பான பணியினை செய்கிறது ஒளித் தொகுப்பில் ஈடுபடும் என்பது எத்தனை பேருக்கு தெரியும். இதனை அறிந்து தான் வீட்டின் முன் பகுதியில் மங்களகரமானது என்ற சொல்லை பயன்படுத்தி நமது முன்னோர்கள் வாழை மரத்தை கட்டி இருக்கிறார்கள்.
ஜோதிட சாஸ்திரப்படி, வாஸ்து படியும் சரியான திசையில் இந்த வாழை மரத்தை கட்டுவதின் மூலம் எந்த விதமான தடங்கள் இல்லாமல் சுப காரியங்கள் இனிதாக நடைபெறும். ஏராளமான மருத்துவ பயன்களை கொண்டிருக்கும், இந்த வாழை மரங்களை விசேஷ காலங்களில் நாம் வீட்டின் முன் கட்டுவதால் கண் திருஷ்டி ஏற்படாமல் இருக்கும் என்றும் சிலர் கூறுகிறார்கள்.